SELANGOR

மலேசிய கிண்ண காலிறுதிக்கு பிஜே சிட்டி கிளப் முன்னேறும்! - பயிற்றுநர் தேவன் நம்பிக்கை

26 ஆகஸ்ட் 2019, 3:06 AM
மலேசிய கிண்ண காலிறுதிக்கு பிஜே சிட்டி கிளப் முன்னேறும்! - பயிற்றுநர் தேவன் நம்பிக்கை

ஷா ஆலம், ஆக.26:

யூஐடிஎம் அரங்கத்தில் நடைபெற்ற யூஐடிஎம் காற்பந்து கிளப் குழுவை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதன் மூலம் மலேசிய கிண்ண காலிறுதி ஆட்டத்திற்கு பெட்டாலிங் ஜெயா காற்பந்து கிளப் (பிஜே சிட்டி கிளப்) தகுதி பெறும் வாய்ப்பு மேலும் பிரகாசமாக இருப்பதாக அதன் பயிற்றுநர் கே. தேவன் கூறினார்.

இதுவரை ஆடிய 4 ஆட்டங்களின் வழி பிஜே சிட்டி கிளப் 9 புள்ளிகள் பெற்றுள்ளதால் அது காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், யூஐடிஎம் ஆடிய 4 ஆட்டங்கள் மூலம் புள்ளிகள் எதனையும் பெறத் தவறியுள்ளதால் அது காலிறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை முற்றாக இழந்தது.

“இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் எங்கள் ஆட்டக்காரர்கள் விளையாடியதோடு கோல் புகுத்துவதற்கான பல வாய்ப்புகளையும் அவர் ஏற்படுத்தியதால், இவ்வாட்டத்தில் வெற்றி பெறுவதற்கான தகுதியை எங்கள் குழு பெற்றிருந்தது” என்றார் அவர்.

இதனிடையே மலேசிய கிண்ணத்தின் காலிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெறுவதில் தங்கள் குழு தவறியது என்பதை ஒப்புக் கொண்ட யூஐடிஎம் குழுவின் பயிற்றுநர் இஸ்மாயில் ஜக்காரியா, பிஜே குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது ஆட்டக்காரர்கள் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர் என்பதில் தாம் மனநிறைவு அடைவதாக சொன்னார்.,

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.