SELANGOR

சுங்கை காரிங் காற்றழுத்த குழாய் சீரமைப்பு பணி நிறைவுற்றது

25 மே 2019, 7:47 AM
சுங்கை காரிங் காற்றழுத்த குழாய்  சீரமைப்பு பணி நிறைவுற்றது

ஷா ஆலம், மே 24-

ரவாங், சுங்கை காரிங் அருகே உடைந்த காற்றழுத்த குழாயைப் பழுதுபார்க்கும் பணி இன்று அதிகாலை 2 மணி அளவில் நிறைவுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

குடிநீர் விநியோகம் தடைபட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பி விட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்ப்பு மற்றும் பல்லூடக நிர்வாக தலைமை அதிகாரி அப்துல் ராவோஃப் அகமது தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தமது தரப்பு பழுதுபார்க்கும் பணியை விரைவாக நடத்தியதாக அவர் சொன்னார்.

குடிநீர் விநியோகத் தடையின் போது தங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு விநியோகத் தடை காரணமாக ஏற்பட்ட சிரமங்களுக்கு தமது தரப்பு சார்ப்பில் அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.