SELANGOR

ரூமா ஈடாமான் திட்டத்திற்கு ரேடா வரவேற்பு

4 ஏப்ரல் 2019, 4:14 AM
ரூமா ஈடாமான் திட்டத்திற்கு ரேடா வரவேற்பு

கிளானா ஜெயா, ஏப்.4-

மாநில மக்கள் வாங்கும் சக்திக்கேற்ற வீடுகளைப் பெற்றிருப்பதற்கு ரூமா ஈடாமான் எனும் சிலாங்கூர் மக்களின் கனவு வீடுகள் திட்ட அமலாக்கத்தை மலேசிய சொத்துடமை மற்றும் வீடமைப்பாளர் சங்கத்தின் (ரேடா) சிலாங்கூர் கிளை வரவேற்றது.

சிலாங்கூர்கூ வீடுகளைத் தவிர்த்து மாநில மக்களுக்கு பல்வேறு தேர்வுகளை இந்த வீடமைப்புத் திட்டம் வழங்குகிறது என்று அதன் தலைவர் சுல்கிப்ளி காரிப் கூறினார்.

“வாங்கும் சக்திக்கேற்ற வீடுகளை வாங்க விரும்பும் மக்களுக்கு சிலாங்குர்கூ வீடுகளைத் தவிர்த்து பல்வேறு தேர்வுகளை வ்ழங்கும் இது போன்ற வீடமைப்பு திட்டங்கள் மாநில அரசு திட்டமிடுவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்” என்றார் அவர்.

ஆயினும். இந்த வீடமைப்புத் திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் ரேடாவிடம் இல்லை என்பதால், அதனை அறிவிக்கும் பொறுப்பை மாநில அரசாங்கத்திடமே விட்டுவிடுவதாக அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.