SELANGOR

மலாக்கா ஆற்றின் உருமாற்றம் கிள்ளான் ஆற்றின் மேம்பாட்டிற்கு முன்னுதாரணம்!

2 ஏப்ரல் 2019, 4:56 AM
மலாக்கா ஆற்றின் உருமாற்றம் கிள்ளான் ஆற்றின் மேம்பாட்டிற்கு முன்னுதாரணம்!

மலாக்கா, ஏப்.2:

மாநிலத்திற்கு வருகை புரியும் சுற்றுப் பயணிகளை கவரும் மலாக்கா ஆற்றின் உருமாற்றத்தை முன்னுதாரணமாகக் கொண்டே கிள்ளான் ஆற்றை சிலாங்கூர் மேம்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆற்றின் தூய்மை, அலங்காரம், கரையோர மேம்பாடு ஆகிய அம்சங்களில் மலாக்கா ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை கிள்ளான் ஆற்றில் மேற்கொள்வது குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருவதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“மலாக்கா ஆற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள உருமாற்றமானது சுற்றப் பயணிகளைக் கவரும் ஓர் அம்சமாக உருமாற்றியுள்ளது. அது போலவே கிள்ளான் ஆற்றை மேம்படுத்துவது குறித்து சிலாங்கூர் சில காலமாகவே திட்டமிட்டு வந்துள்ளது” என்று அவர் சொன்னார்.

ஆற்றோரப் பகுதிகளை சுற்றுப்பயணிகளை கவரும் பகுதிகளாக உருமாற்றுவதில் மலாக்கா மற்றும் கிள்ளான் ஆறுகள் முன்னோடிகளாகத் திகழும் என்று அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.