SELANGOR

ஊழலில் இருந்து விலகி நில்லுங்கள்! சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து

26 மார்ச் 2019, 5:05 AM
ஊழலில் இருந்து விலகி நில்லுங்கள்! சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 26-

மாநிலம் மற்றும் நாட்டின் தலைவர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபடக் கூடாது என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா நினைவுறுத்தினார்.

ஊழலை புற்று நோயுடன் பேசிய சுல்தான், ஊழல் நடவடிக்கைகள் நாடு மற்றும் மக்களின் நேர்மையை பாதிப்பதோடு சப்தமில்லாமல் மெல்ல மெல்ல நாட்டையே சீரழிக்கும் என்றார்.

தலைவர்களும் அரசு ஊழியர்களும் உயர்நெறி பண்புகளுடன் நேர்மையான முறையில் தங்கள் கடமைகளை ஆற்றிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஊழல் என்பது சுயநலத்திற்காக ஒருவரின் அதிகாரத்தை மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் மோசமான செயலாகும். பொது சொத்துகளை நிர்வகிக்க வழங்கப்பட்டுள்ள பதவியையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் பாதகச் செயலாகும் என்று சுல்தான் வர்ணித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.