எல்பிடி2-இல் (LPT2) கார் விபத்துக்குள்ளானதில் பெண்ணின் இடது கால் துண்டானது

6 ஜூன் 2026, 6:56 AM
எல்பிடி2-இல் (LPT2) கார் விபத்துக்குள்ளானதில் பெண்ணின் இடது கால் துண்டானது

டுங்குன், ஜூன் 6: கோலா திரங்கானுவிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 57 வயதுடைய ஒரு பெண் பலத்த காயமடைந்தார், மேலும் அவருடன் பயணித்த மற்ற நால்வரும் காயமடைந்தனர்.

ஜூன் 5 தேதி மாலை
(டுங்குன்)இங்குள்ள பாக்கா ஓய்வு மற்றும் சிகிச்சை மையத்திற்கு (R&R) அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2 (LPT2)-இன் 341.5-ஆவது கிலோமீட்டரில், தான் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

அவர்கள் பயணித்த புரோட்டான் எக்ஸ்70 (Proton X70) ரக எஸ்யுவி (SUV) வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், 57 வயதுடைய அப்பெண்ணின் இடது கால் துண்டானதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் மூத்த அதிகாரி (PBK II) நூர் ஹசாமுல்லா அப்துல்லா தெரிவித்தார்.

மாலை 5.41 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகவும், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏழு தீயணைப்பு வீரர்கள் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்டவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும், வாகனத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட துண்டான கால் பகுதி, சம்பவ இடத்திற்கு வந்திருந்த காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று நேற்று இரவு தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள் பயணித்த அவ்வாகனம், பகாங், குவாந்தானை நோக்கி கோலா திரங்கானுவிலிருந்து சென்று
கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"பலத்த காயமடைந்த அப்பெண்ணும், விபத்தில் காயமடைந்த மற்ற நால்வரும் சிகிச்சைக்காக டுங்குன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்," என்று அவர் மேலும் கூறினார்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.