சிராஸ் இண்டாவில் காயப்போட்டிருந்த துணிகளைத் திருடிய மர்ம நபர்: போலீசார் வலைவீச்சு; சிசிடிவியில் பதிவான காட்சி

6 ஜூன் 2026, 3:07 AM
சிராஸ் இண்டாவில் காயப்போட்டிருந்த துணிகளைத் திருடிய மர்ம நபர்: போலீசார் வலைவீச்சு; சிசிடிவியில் பதிவான காட்சி

கோலாலம்பூர், ஜூன் 6: இங்குள்ள தாமான் சிராஸ் இண்டாவில் உள்ள ஒரு மாடி வீட்டில் நேற்று காயப்போட்டிருந்த துணிகளைத் திருடிய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஒன்றை தாங்கள் கண்டறிந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார். அதில், மர்ம நபர் ஒருவர் வீட்டின் வேலியைத் தாண்டி குதித்து வளாகத்திற்குள் நுழைவது பதிவாகியுள்ளது.

வீட்டின் வெளியே காயப்போட்டிருந்த துணிகள் காணாமல் போனது குறித்து காலை 10 மணியளவில் உணர்ந்த உள்ளூர் பெண் ஒருவர், அன்றைய தினமே காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

“புகார்தாரர் தனது வீட்டில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கருப்பு நிற ஜூபா (Jubah) உடை அணிந்த நபர் வேலியைத் தாண்டி வீட்டின் முற்றத்திற்குள் நுழைந்து துணிகளைத் திருடிச் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது,” என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில், வீட்டில் காயப்போட்டிருந்த துணிகள் மட்டுமே திருடப்
பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கைருல் அனுவார் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டம் பிரிவு 379 (திருட்டு) மற்றும் பிரிவு 447 (குற்றவியல் அத்துமீறல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.