கோலாலம்பூர், ஜூன் 5: இன்று இஸ்டோரா செனாயனில் நடைபெற்ற 2026 இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில், உள்ளூர் இணையிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மலேசியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் ஜோடியான ஆரோன் சியா - சோ வூய் யிக் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
போட்டியின் இரண்டாம் நிலைத் தரவரிசையில் உள்ள இந்த மலேசிய ஜோடி, தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாகப் போராடிய போதிலும், ரேமண்ட் இந்த்ரா - நிக்கோலஸ் ஜோக்வின் இணையிடம் 33 நிமிடங்களில் 14-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தது.
எவ்வாறாயினும், ஆடவர் இரட்டையர் பிரிவில் கோ செ ஃபீ - நூர் இசுடின் முஹமட் ரும்சானி ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் மலேசியாவிற்கான நம்பிக்கை இன்னும் நீடிக்கிறது. இவர்கள் இங்கிலாந்து ஜோடியான பென் லேன் - சீன் வெண்டியை 21-11, 21-13 என்ற கணக்கில் தோற் கடித்தனர்.
இந்த இங்கிலாந்து ஜோடிக்கு எதிராக முந்தைய மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு, செ ஃபீ - இசுடின் ஜோடி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
காலிறுதியில் மலேசிய ஜோடி, இந்திய இணையான ஹரிஹரன் அம்ஸாகருணன் - எம்.ஆர். அர்ஜுனை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இந்திய ஜோடி, முன்னதாக மற்றொரு மலேசிய ஜோடியான காங் காய் சிங் - ஆரோன் டாயை 16-21, 21-15, 21-19 என்ற கணக்கில் வீழ்த்தி வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஒற்றையர் பிரிவில், மலேசியாவின் முதல் நிலை வீராங்கனையான கே. லெட்சனா இரண்டாவது சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் 15-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீரர் லியோங் ஜுன் ஹாவோவும் இதே நிலையைச் சந்தித்தார். அவர் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லானியரிடம் 16-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசிய ஜோடியான ஹூ பாங் ரோன் - லாய் பெய் ஜிங், தாய்லாந்து ஜோடியான டெச்சபோல் புவரனுக்ரோ - சுபிஸ்ஸரா பேவ்சம்ப்ரானிடம் 14-21, 22-24 என்ற கணக்கில் வீழ்ந்து தங்களது பயணத்தை முடித்துக் கொண்டனர்.
-- பெர்னாமா
இந்தோனேசியா ஓபன்: இரண்டாவது சுற்றில் ஆரோன்-வூய் யிக் தோல்வி
5 ஜூன் 2026, 7:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




