விசாகத் தினத்தில் சீரான குப்பைச் சேகரிப்பு: ஒன்பது உள்ளூராட்சி மன்றங்கள் 100 சதவீத இலக்கை அடைந்தன

4 ஜூன் 2026, 2:39 AM
விசாகத் தினத்தில் சீரான குப்பைச் சேகரிப்பு: ஒன்பது உள்ளூராட்சி மன்றங்கள் 100 சதவீத இலக்கை அடைந்தன

ஷா ஆலம், ஜூன் 4: விசாகத் தினப் பொது விடுமுறையின் போது சிலாங்கூரில் வீட்டுக் கழிவுகளைச் சேகரிக்கும் பணிகள் எவ்விதத் தடையுமின்றி சீராக நடைபெற்றன. ஒன்பது உள்ளூராட்சி மன்றப் (PBT) பகுதிகளில் குப்பைச் சேகரிப்புப் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

குடியிருப்புகள் மற்றும் பொது இடங்களின் தூய்மையை எப்போதும் உறுதிசெய்யும் வகையில், பொது விடுமுறை நாட்களிலும் திட்டமிட்டபடி கழிவுகளை அகற்றும் பணிகள் தடையின்றி நடைபெற்றதை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது என்று கேடிஇபி கழிவு மேலாண்மை (KDEBWM) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் தரவுகளின்படி, அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ), சிப்பாங் நகராட்சி மன்றம் (MPSepang), ஷா ஆலம் மாநகராட்சி (MBSA), கிள்ளான் அரச மாநகராட்சி (MBDK), சபாக்
பெர்ணம் நகராட்சி மன்றம் (MDSB), செலாயாங் நகராட்சி மன்றம் (MPS), காஜாங் நகராட்சி மன்றம் (MPKj), கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றம் (MPKS) மற்றும் கோலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL) ஆகிய நிர்வாகப் பகுதிகளில் முழுமையான குப்பைச் சேகரிப்புப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) மற்றும் சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) ஆகிய பகுதிகளில் தலா 98 சதவீதமும், உலு சிலாங்கூர் நகராட்சி மன்றப் (MPHS) பகுதியில் 96 சதவீதப் குப்பைச் சேகரிப்பும் நிறைவடைந்துள்ளது.

குப்பைகளைச் சேகரிக்கும் பணியை மேலும் திறம்படத் தொடர்வதை உறுதிசெய்யும் பொருட்டு, உலு சிலாங்கூர் நகராட்சி மன்றம்
மதிய வேளையில் ஒரு கூடுதல் மண்டலத்தையும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது.

இந்தத் தரவுகள் கடந்த
செவ்வாய் பிற்பகல் 3 மணி வரையிலான நிலவரப்படி பதிவு செய்யப்பட்டவை ஆகும். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கழிவுகளைச் சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.