ஷா ஆலம், ஜூன் 2 - சிலாங்கூரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) 2026 ஆம் ஆண்டிற்கான ரஹ்மா இன்சான் இஸ்திமேவா உதவி (BRAIS) விண்ணப்பங்கள் ஜூன் 1 முதல் ஜூன் 22 வரை திறக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் சிறப்பு தேவையுடையோர் அறக்கட்டளையின் (YANIS) கீழான இந்த முன்னெடுப்பு, பெறுநர்கள் மற்றும் தேவைப்படும் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் ஐந்து வகையிலான உதவிகளை வழங்குகிறது.
வழங்கப்படும் உதவிகளில், சிகிச்சை மையக் கட்டணம், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்புத் தேவைகளுக்கான உதவிகள் ஆகியவை தலா ரிம 1,200 மதிப்பில் அடங்கும்; இது தவிர ரிம 3,000 வரையிலான சிறப்பு உபகரணங்களுக்கான உதவியும் வழங்கப்படுகிறது.
மேலும், சிறப்பு கல்விக்கான பள்ளிக் கட்டண உதவியாக ரிம 120-ம், மாற்றுத்திறனாளிகளுக்கான (OKU) வசதியுடன் கூடிய கழிப் பறையைக் கட்டுவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு ரிம1,500 வரையிலான உதவியும் இதில் வழங்கப்படுகிறது.
சிலாங்கூரில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள மலேசிய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளர்கள் 60 வயதிற்குட் பட்டவர்களாகவும், சமூக நலத்துறையில் (JKM) பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி (OKU) அட்டை வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் கோரும் உதவி வகைக்கு ஏற்ற ஆதரவு ஆவணங்களைத் தயார் படுத்த வேண்டும். அதன் பின்னர், YANIS-இன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் வாயிலாகத் தங்களின் விண்ணப்பத்தை இயங்கலையில் (Online) சமர்ப்பிக்கலாம்.
சிறப்புத் தேவையுடையவர்களுக்கான உதவிகளை மேலும் முறையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் வலுப்படுத்துவதற்காக, சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் உதவி (ANIS) திட்டமே தற்போது BRAIS என மறுபெயரிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
ரஹ்மா இன்சான் இஸ்திமேவா உதவிக்கான (BRAIS) விண்ணப்பங்கள் ஜூன் 22 வரை திறக்கப்பட்டுள்ளன
2 ஜூன் 2026, 7:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பாங்கியில் ஆட்டிசம் சேவை மையம் திறக்கப்படும்
Shalini Rajamogun
10 நவம்பர் 2025

selangor
நிதி திரட்டும் திட்டம் மற்றும் விருந்து நிகழ்வுகளை நிர்வகிப்பதற்கான முன்மொழிவுகளை யானிஸ் வரவேற்கிறது
Shalini Rajamogun
19 ஜனவரி 2026

national
சிலாங்கூர் மாற்றுத்திறனாளிகள் கொள்கை அடுத்த மாதம் மாநில ஆட்சிக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்
Mavitthran
26 டிசம்பர் 2025

selangor
சிலாங்கூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘BRAIS 2026’ புதிய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
17 மே 2026

உங்கள் கருத்து என்ன?




