ஷா ஆலம், ஜூன் 2 - நேற்றிரவு ஜோகூர் பாரு, தாமான் எஹ்சான் ஜெயா, ஜாலான் எஹ்சான் ஜெயா 3/10-இல் அமைந்துள்ள இரண்டு மாடித் தொடர் வீடொன்று தீப்பிடித்ததில், அங்கிருந்த இருவர் மயக்க நிலையில் மீட்கப் பட்டனர்.
இரவு 9.06 மணியளவில் இது குறித்து அவசர அழைப்பு தங்களுக்கு வந்ததாக ஜோகூர் மாநில மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"ஜோகூர் ஜெயா, தெப்ராவ் மற்றும் கெம்பாஸ் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் (BBP) இருந்து, தீயணைப்பு மீட்பு வாகனம் (FRT), இலகுரக தீயணைப்பு மீட்பு வாகனம் (LFRT), அவசர மருத்துவக் குழு (EMRS) மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றுடன் 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"தீயணைப்புப் படையினர் இரவு 9.12 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்து, இரவு 10.05 மணியளவில் தீயைக் முழுமையாகக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இத் தீ விபத்தில் வீட்டின் 60 சதவீதப் பகுதி எரிந்து நாசமானது.
"வீட்டின் மேல் தளத்தில் பதின்ம வயதினர் என நம்பப்படும் இருவர் மயக்க நிலையில் இருப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர்," என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ மீட்புச் சேவை (EMRS) குழுவினர் உடனடியாக அவர்களுக்கு சிபிஆர் (CPR) எனப்படும் இருதய சுவாச மீட்பு சிகிச்சையை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSI) அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
வீட்டில் தீ இருவர் மயக்க நிலையில் மீட்பு
2 ஜூன் 2026, 5:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
காணாமல் போன மலையேறுபவரை தேடி மீட்கும் குழுவினரைக் கொண்டு செல்வதிலும் இறங்குவதிலும் பலத்த காற்று சவாலாக உள்ளது
Pakiya
2 ஜூன் 2026

national
எல்பிடி2 நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் மோதி விபத்து: இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்
Shalini Rajamogun
27 மே 2026

national
கெப்போங்கில் ஐந்து வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் உடல் கருகி மரணம்
Pakiya
30 ஏப்ரல் 2026

national
சிரம்பான், மந்தினில் மாடி வீட்டு தீயில் சிக்கிய மாற்றுத்திறனாளிப் உடல் கருகி மரணம்
Pakiya
4 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




