பாலிங், ஜூன் 2: இங்குள்ள கோலா கெட்டில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை அரிவாள்களுடன் புகுந்த இருவர் கொள்ளையடித்த சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்குத் தலை, தோள்பட்டை மற்றும் முழங்கையில் காயம் ஏற்பட்டது.
காலை 8.40 மணியளவில் இது குறித்துக் காவல் துறையினருக்குப் புகார் கிடைத்ததாகப் பாலிங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன் பிராண்டன் அனாக் ரிச்சர்ட் ஜோ தெரிவித்தார்.
"காலை 8.10 மணியளவில், வெள்ளி நிற ஹோண்டா மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள் பாதிக்கப்பட்டவரை அணுகியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் அரிவாள்கள் இருந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
காயமடைந்த அந்த ஆடவர் மேல் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனைக்கு (HSAH) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பாதிக்கப்பட்டவர் தனது ரொக்கப் பணத்தையும், தனிப் பட்டப் பொருட்களையும் இழந்துள்ளார். கொள்ளையடிக்கும் போது வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டம் பிரிவு 394-இன் கீழ் இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-- பெர்னாமா
அரிவாள்களுடன் வந்த இருவர் கொள்ளையடித்ததில் இளைஞர் காயம்
2 ஜூன் 2026, 5:08 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருடிய வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார்
Pakiya
31 மே 2026

selangor
சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் ஆடவர் உயிரிழப்பு: போதைப் பொருள் விருந்து அம்பலம்
Pakiya
25 மே 2026

national
ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: விசாரணைக்கு உதவ இரு ஆடவர்கள் கைது
Pakiya
22 மே 2026

national
சிறுவனைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரில் முதிய பராமரிப்பாளர் கைது
Pakiya
22 மே 2026

உங்கள் கருத்து என்ன?




