புத்ராஜெயா, மே 31: சிப்பாங், தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள பாகன் லாலாங் கடற்கரையில் இன்று பிற்பகல் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது மாயமானதாக நம்பப்படும் பதின்ம வயது சிறுவன் ஒருவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
17 வயதான முகமட் அகில் ஸமானி சனுசி என்பவரின் உடல் கடற்கரையிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலும், அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த தீயணைப்பு அதிகாரி II முகமட் இஸ்மாண்டோ முகம்மது போனோ தெரிவித்தார்.
"பிற்பகல் சுமார் 3.10 மணியளவில் கடற்கரையில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அச்சிறுவன் நீரில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
"நீரடி மீட்புக் குழுவினர் (PPDA) மேற்கொண்ட சுழியோடும் (diving) நடவடிக்கையின் மூலம் மாலை 6.50 மணியளவில் அச்சிறுவனின் உடல் வெற்றிகரமாக மீட்கப்பட்டது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காகச் சடலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், அச்சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதைச் சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியதாக முகமட் இஸ்மாண்டோ மேலும் கூறினார்.
பாகன் லாலாங் கடற்கரையில் குளிக்கும் போது மாயமான சிறுவன் மூழ்கி உயிரிழப்பு
1 ஜூன் 2026, 6:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




