ஷா ஆலம், ஜூன் 1: உலு லங்காட்டில் உள்ள ஜெராம் பெர்லிஸ் நீர்வீழ்ச்சியில் (Air Terjun Jeram Perlus) மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது இடது கால் முறிந்ததாக நம்பப்படும் 32 வயது ஆடவர் ஒருவரை, இன்று காலை முடிவடைந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
நேற்று பிற்பகல் 12.58 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பு தங்களுக்குக் கிடைத்ததாகச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பண்டார் துன் உசேன் ஓன் மற்றும் அம்பாங் தீயணைப்பு நிலையங்க-ளைச் சேர்ந்த (BBP) 10 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதிக்கப்பட்டவரின் நிலை குறித்த மேல் விவரங்களைப் பெறுவத-ற்காக மீட்புக் குழுவினர் பிற்பகல் 1.31 மணிக்குச் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் கூறினார்.
"மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த ஆடவரின் காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியவில்லை என அவரது நண்பர் தெரிவித்தார். சுமார் 100 முதல் 110 கிலோ எடையுள்ள அந்த ஆடவர் பின்னர் ஸ்ட்ரெச்சர் (stretcher) மூலம் பாதுகாப்பாகக் கீழே கொண்டு வரப்பட்டார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கரடு முரடான மற்றும் சவாலான நிலப்பரப்பு காரணமாகப் பாதிக்கப் பட்டவரை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கிக்கொண்டு கீழே இறக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட நபர் அந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கு மீட்புக் குழுவினரின் முழுமையான உதவி தேவைப் பட்டதாக அகமட் முக்லிஸ் குறிப்பிட்டார். அவரைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்காக இந்த மீட்பு நடவடிக்கை இரவு முழுவதும் தொய்வின்றி நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
"இன்று காலை 9 மணியளவில் அந்த ஆடவர் வெற்றிகரமாகக் கீழே கொண்டுவரப்பட்டார். பின்னர் அவர் மலேசியச் சுகாதார அமைச்சிடம் (KKM) ஒப்படைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உலு லங்காட்டில் கால் முறிந்த மலையேறியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்
1 ஜூன் 2026, 6:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
நாட்டில் அதிகரித்து வரும் தீ சம்பவங்கள் இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் 31 வரை 12,938 ஆகப் பதிவாகியுள்ளது
PAKIYA
7 ஏப்ரல் 2026

national
வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
Pakiya
14 மார்ச் 2026

national
தீவிபத்தில் 9 வயது சிறுவன் உடல் கருகி பலி, ஐவர் தீக்காயம்
Pakiya
7 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




