விசாக தினத்தை முன்னிட்டு ஜிங் லூங் ஷான் வான் ஃபோ ஷி ஆலயம் இன்று 2,000க்கும் மேற் பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்றது. புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் மகா பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் இந்த புனித நாளைக்கொண்டாட பக்தர்கள் அதிகாலை முதலே ஆலயத்தில் திரண்டனர்.
பல்வேறு சமயச் சடங்குகள், பிரார்த்தனைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் நடைபெற்றன. இதில் பல இன மக்களும் கலந்து கொண்டு, அமைதி மற்றும் நல்லிணக்க செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர்.
ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை, நாட்டில் சமய சுதந்திரமும், கலாச்சாரப் பன்முகத்தன்மையும் வலுவாக இருப்பதைக் காட்டுவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கொண்டாட்டங்கள் அமைதியாகவும், பக்தர்களின் முழு ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடைபெற்றன.








