சிரம்பான், மே 30 - சிரம்பான் மாவட்டத்தில் RM110,000-க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய, இரண்டு வெவ்வேறு கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருடிய சம்பவங்களில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த மே 24ஆம் தேதி பண்டார் ஸ்ரீ செண்டாயான், ஜாலான் ஹிஜாயுவில் (Jalan Hijayu, Bandar Sri Sendayan) கருமையான 'ஹூட்' (hood) சட்டை அணிந்த நபரால் முதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகச் சிரம்பான் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் யாத்திம் ஒஸ்மான் தெரிவித்தார்.
"சந்தேக நபர் பிரதான சாலையிலிருந்து இரும்புக் கம்பி வேலியை ஏறி குதித்து அந்தக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. பின்னர், அவர் கருப்பு நிற ஹோண்டா சிவிக் எஃப்டி (Honda Civic FD) காரில் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் 16 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி மற்றும் கணிசமான ரொக்கப் பணத்தை இழந்துள்ளார்," என அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் சிரம்பான் 2-ல் (Seremban 2) இரண்டாவது சம்பவம் நிகழ்ந்தது. முகமூடி அணிந்த இரண்டு ஆடவர்கள், பிரதான சாலையிலிருந்து கம்பி வேலி வழியாகக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, சமையலறை ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
"இதில் பாதிக்கப்பட்டவர் சுமார் RM110,000 மதிப்பிலான நகைகளை இழந்துள்ளார். சம்பவ இடத்தில் தடயவியல் போலீசார் நடத்திய விசாரணையில் 8 கைரேகைகள் மற்றும் 10 டி.என்.ஏ (DNA) மாதிரிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 395 மற்றும் 397-ன் கீழ் இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக முகமட் யாத்திம் கூறினார்.
-- பெர்னாமா
கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருடிய வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார்
31 மே 2026, 10:12 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் ஆடவர் உயிரிழப்பு: போதைப் பொருள் விருந்து அம்பலம்
Pakiya
25 மே 2026

national
ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: விசாரணைக்கு உதவ இரு ஆடவர்கள் கைது
Pakiya
22 மே 2026

national
சிறுவனைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரில் முதிய பராமரிப்பாளர் கைது
Pakiya
22 மே 2026

selangor
சிறையில் அடைக்கப்பட்ட நபர், டீன் ஏஜ் பாலியல் வன்கொடுமை
Pakiya
13 மே 2026

உங்கள் கருத்து என்ன?




