ஹரிராயா ஐடில்அதா பண்டிகையை முன்னிட்டு பத்து 16 மக்களுக்கு 500 கோழிகள் அன்பளிப்பு

29 மே 2026, 1:00 AM
ஹரிராயா ஐடில்அதா பண்டிகையை முன்னிட்டு பத்து 16 மக்களுக்கு 500 கோழிகள் அன்பளிப்பு

ஷா ஆலாம், மே 29 - ஹரிராயா ஐடில்அதா பண்டிகையை முன்னிட்டு பத்து 16-இல் உள்ள மக்களுக்கு டூசுன் துவா சட்டமன்றத் தொகுதி (DUN) 500 கோழிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்த அன்பளிப்பு, அதனைப் பெறும் குடும்பங்களுக்குப் பயனுள்ளதாக அமைவதோடு, இந்த புனிதமான நாளைக் கொண்டாடுவதற்கான அவர்களின் ஏற்பாடுகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

", ஐடில்அதா கொண்டாட்டத்தை முன்னிட்டு, பத்து 16 சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு 500 கோழிகள் வழங்கப்பட்டன."

"ஐடில்அதா உணர்வை மேலோங்கச் செய்யும் இந்த நற்பணித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை வழங்கிய முன்னாள் கிராமத் தலைவர் தோக் டாபி மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் (NGO) எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், செமினி சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான ஜோஹான், குர்பான் கடமையை நிறைவேற்றும் இஸ்லாமியர்களின் ஒவ்வொரு நற்செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வார் என்றும் பிரார்த்தனை செய்தார்.

"புனித பூமியில் ஹஜ் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு, மப்ரூரான (ஏற்றுக்கொள்ளப்பட்ட) ஹஜ் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன், இன்ஷா-அல்லாஹ்."

"ஹரிராயா ஐடில்அதா, இறைவனின் அடியார்களாக நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உள்ள தியாகம், தூய்மையான எண்ணம் மற்றும் கீழ்ப்படிதலின் அர்த்தத்தை நமக்கு நினைவூட்டுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.