கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் 80 சிறந்த எஸ்.பி.எம் மாணவர்களுக்கு ரிம. 16,000 ஊக்கத்தொகை

28 மே 2026, 4:17 AM
கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் 80 சிறந்த எஸ்.பி.எம் மாணவர்களுக்கு ரிம. 16,000 ஊக்கத்தொகை

ஷா ஆலம், மே 28: கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் (DUN) 2025-ஆம் ஆண்டுக்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வில் 5A மற்றும் அதற்கும் அதிகமான தேர்ச்சிகளைப் பெற்ற 80 சிறந்த மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இப்பகுதியில் மாணவர்களின் கல்வியியலில் உள்ள சிறப்பை அங்கீகரிக்கும் தொடர்ச்சியான முயற்சியாக, மொத்தம் ரிங்கிட் 16,000 ஒதுக்கீட்டில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்
பட்டுள்ளதாகக் கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் மாணவர்களின் வெற்றியைப் பாராட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்காமல், கோலா குபு பாருவில் கல்வியை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாகவும் திகழ்கிறது என்று அவர் கூறினார்.

"கோலா குபு பாருவில் சிறந்த மாணவர்களைப் பாராட்டி அங்கீகரிக்கும் இந்த முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வது இது 14-வது ஆண்டாகும்," என்று அவர் தனது முகநூல் (Facebook) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் படைப்பதற்கும், அறிவுசார்ந்த, போட்டித்தன்மை கொண்ட மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கக்
கூடிய ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க இந்தத் திட்டம் உந்துசக்தியாக அமையும் எனத் தாம் நம்புவதாக சோக் தாவ் கூறினார்.

மாணவர்களின் கல்விப் பயணம் முழுவதும் தொடர்ந்து ஊக்கமும், ஆதரவு மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மாணவர்களின் வெற்றியிலிருந்து பிரிக்க முடியாதது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

"ஊக்கத்தொகையைப் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள், புதிய தேடல்களைத் தொடருங்கள், மேலும் உங்களின் சிறந்த அடையாளமாகத் திகழுங்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.