பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மலேசியர் ஒருவர் உயிரிழப்பு

26 மே 2026, 9:13 AM
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் மலேசியர் ஒருவர் உயிரிழப்பு

கோலாலம்பூர், மே 26 - பிலிப்பைன்ஸின் ஏஞ்சலஸ் நகரில் மே 24, 2026 அன்று நிகழ்ந்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மலேசிய குடிமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

ஓர் அறிக்கையில், அந்த அமைச்சு, பாதிக்கப் பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளதாகக் கூறியது. அதே வேளையில், மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகம் பாதிக்கப் பட்டவரின் குடும்பத்திற்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்கி வருகிறது. இதில், உடலை நிர்வகிக்கும் நடவடிக்கைகள் உட்பட அனைத்து உதவிகளும் அடங்கும்.

“இந்தத் துயரச் செய்தியை அடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது,” என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இந்தச் சம்பவத்தில் இரு மலேசியர்கள் சம்பந்தப் பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தில் சிக்கிய மற்றொரு மலேசியர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மணிலாவில் உள்ள மலேசியத் தூதரகம் அந்த நபருக்கும் தேவையான தூதரக உதவிகளை வழங்கியுள்ளது.

விஸ்மா புத்ரா என அழைக்கப்படும் வெளியுறவு அமைச்சு, இவ்விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நலனையும் பாதுகாப்பையும் தொடர்ந்து உறுதி செய்வதில் விஸ்மா புத்ரா உறுதியுடன் உள்ளது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.