தோக்கியோ: ஈரான் போர் மூண்ட பின்னர், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற முதல் ஜப்பானிய எண்ணெய்க் கப்பல் திங்களன்று அந் நாட்டை வந்தடைந்தது என்று கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னணி சுத்திகரிப்பு நிறுவனமான இடேமிட்சு கோசன் கோவின் துணை நிறுவனம் இயக்கும் இந்தக் கப்பல், இரண்டு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை மத்திய ஜப்பானில் உள்ள ஐச்சி பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் தினசரி உள்நாட்டுத் தேவையில் சுமார் 80 விழுக்காட்டிற்கு சமம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மூன்று ஜப்பானியர்கள் உட்பட கப்பலில் இருந்த அனைத்து சிப்பந்திகளும் நலமாக இருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஜப்பானின் அமைச்சரவை தலைமைச் செயலாளர் மினோரு கிஹாரா ஒரு செய்தியாளர் கூட்டத்தில், "நிலையான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதில் இந்தக் கப்பலின் வருகை ஒரு மகிழ்ச்சியான செய்தி" என்று கூறினார்.
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கியதைத் தொடர்ந்து, அனைத்து நாடுகளின் கப்பல்களும் அந்த ஜலசந்தி வழியாக சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க தெஹ்ரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜப்பானிய அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
அரசாங்கத்தின் தலைமை செய்தித் தொடர்பாளருமான கிஹாரா, ஜப்பானிய சிப்பந்திகளைக் கொண்ட ஒரு கப்பல் உட்பட, ஜப்பான் தொடர்புடைய 39 கப்பல்கள் இன்னும் பாரசீக வளைகுடாவில் சிக்கித் தவிப்பதாக கூறினார்.
அனைத்துக் கப்பல்களும் கூடிய விரைவில் ஜல சந்தியைக் கடந்து செல்வதை உறுதி செய்வதற்காக, தனது தரப்பு தொடர்ந்து தீவிரமான தூதரக முயற்சிகளை முன்னெடுக்கும் மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜப்பானின் மற்றொரு பெரிய எண்ணெய் நிறுவனமான எனியோஸ் ஹோல்டிங்ஸ் இன்க்-க்குச் சொந்தமான மற்றொரு எண்ணெய்க் கப்பலும் மே மாத மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றது. அது மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூன் மாதத் தொடக்கத்திற்குள் ஜப்பானை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போருக்குப் பிறகு முதல் முறையாக ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்த எண்ணெய்க் கப்பல் ஜப்பானை வந்தடைந்தது
26 மே 2026, 3:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


