வாஷிங்டன், மே 22: ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அமெரிக்கா எதிர்ப்பதாகவும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார் என அனடோலு ஏஜென்சி (AA) செய்தி வெளியிட்டுள்ளது.
"நாங்கள் சுங்கக் கட்டணத்தை விரும்பவில்லை. இது ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை. தற்போது அவர்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை," என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.
கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஈரான் பெரும் நிதி இழப்பை சந்தித்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புகளை ஈரான் வைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, டிரம்ப் உறுதியாகப் பதிலளித்தார்.
"இல்லை, நாங்கள் அந்தச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்றுவோம்; நாங்கள் அதைப் பெறுவோம். அது எங்களுக்குத் தேவையில்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை. அதைக் கைப்பற்றிய பிறகு நாங்கள் அதை அழித்து விடலாம், ஆனால் அதை அவர்கள் வைத்திருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று டிரம்ப் கூறினார்.
ஈரான் அணுவாயுதங்களை வைத்திருக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
"தற்போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இனி என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம், ஆனால் எப்படியாவது நாங்கள் அதைப் பெற்று விடுவோம். அவர்கள் அணுவாயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பான அறிக்கைகளை அமெரிக்கா கண்காணித்து வருவதாகக் கூறிய டிரம்ப், அந்தப் பாதையில் நடைபெறும் கடல்வழிப் போக்கு வரத்தின் மீது அமெரிக்க இராணுவத்திற்கு முழுக் கட்டுப்பாடு உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிப்பதை அதிகாரப்பூர்வமாக்க ஓமனுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, "நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம்; அதைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம்," என்று டிரம்ப் பதிலளித்தார்.
அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா பயனுள்ள தடைகளை அமல்படுத்தி வருவதாக டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
"எங்கள் தடைகள் மூலம் ஹோர்முஸ் ஜலசந்தி மீது எங்களுக்கு முழு கட்டுப்பாடு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.
"இந்தத் தடைகள் 100 சதவீதம் பலனளிக்கின்றன. யாராலும் அதனை மீறிச் செல்ல முடியாது. இது ஒரு இரும்புச் சுவரைப் போன்றது," என்று டிரம்ப் கூறினார்.
ஹோர்முஸ் ஜலசந்தி சுங்கக் கட்டணத்தை நிராகரித்தது அமெரிக்கா; ஈரானிடமிருந்து யுரேனியத்தைக் கைப்பற்றச் சபதம்
22 மே 2026, 5:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Selangor giat pelbagaikan tenaga, hadapi kesan konflik Asia Barat
Kathiravan Manoharan
16 ஏப்ரல் 2026

national
நாட்டின் எண்ணெய் விநியோகம் சீராக உள்ளது - பிரதமர் உத்தரவாதம்
Pakiya
7 ஏப்ரல் 2026

antarabangsa
எண்ணெய் விலை உயர்வு- எகிப்த்தின் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.
Pakiya
30 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




