சிரம்பான், மே 22: இங்குள்ள ஒரு வீட்டில் நேற்றைய தினம் நான்கு வயது சிறுவன் ஒருவன், அவனது பராமரிப்பாளரான முதியவர் ஒருவரால் துன்புறுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைத் தளங்களில் வைரலான 1 நிமிடம் 15 வினாடிகள் கொண்ட இச்சம்பவத்தின் காணொளியைக் கண்ட சிறுவனின் பெற்றோர், நேற்று இரவு 8.01 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
"ஒரு வீட்டின் பின்புறம் அப்பெண் சிறுவனை அடிப்பதைக் காணொளி காட்டுகிறது, மேலும் காணொளியில் இருப்பது தங்கள் மகன்தான் என்பதை பெற்றோர் உறுதிப் படுத்தியுள்ளனர்."
"சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு, தங்களது வீட்டிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்தப் பராமரிப்பாளரின் வீட்டிற்கு அந்தச் சிறுவன் அனுப்பப் பட்டுள்ளான்," என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
அச்சிறுவன் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக இங்குள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, சம்பவம் நடந்த இடத்திலேயே அதே நாள் இரவு 9.45 மணியளவில் 60 வயதுடைய அப்பெண்ணை போலீசார் கைது செய்ததாக அல்சாஃப்னி குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள், வழக்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கமருல் ஆரிஃபின் கமாருசாமனை 06-6033222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
சிறுவனைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரில் முதிய பராமரிப்பாளர் கைது
22 மே 2026, 4:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: விசாரணைக்கு உதவ இரு ஆடவர்கள் கைது
Pakiya
22 மே 2026

selangor
சிறையில் அடைக்கப்பட்ட நபர், டீன் ஏஜ் பாலியல் வன்கொடுமை
Pakiya
13 மே 2026

national
போலி குடிநுழைவு பாதுகாப்பு முத்திரை சிண்டிகேட் உறுப்பினர்களை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது
Pakiya
7 மே 2026

national
துணை மின்நிலையத்தில் திருட முயன்ற ஆடவரை மின்சாரம் தாக்கியது
Pakiya
1 மே 2026
உங்கள் கருத்து என்ன?




