ஷா ஆலாம், மே 20: இம்மாநிலத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தஃபீஸ் பள்ளிகள், குறிப்பாகத் தீ விபத்து ஏற்படும் போது குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்ட 'Skuad Bomba' (தீயணைப்புக் குழு) அணிகளைக் கொண்டுள்ளன.
தீ பாதுகாப்புப் பிரிவின் உதவி இயக்குநர், டிஎஸ் ரசாலி முகமது நசீர் கூறுகையில், 2020-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, எதிர்பாராத மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பட்சத்தில் பள்ளி சமூகத்தினருக்கு அவசர உதவியாகச் செயல்படுகிறது.
இதில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படைக் தீ விழிப்புணர்வுக் கல்வி, கட்டிடம் காலி செய்யும் பயிற்சி மற்றும் பாதுகாப்பான வழிகளைத் தேர்ந்தெடுப்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
"'Skuad Bomba' உறுப்பினர்கள் அவசரக்கால நடவடிக்கை மேலாளர்களைப் போன்றவர்கள். தீ விபத்து ஏற்பட்டால் அவர்கள் அறிவுறுத்தல்களை வழங்கி, அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, ஒவ்வொரு அறையிலிருந்தும் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும்."
"தீ அறிவியல் தொடர்பான அறிவையும் நாங்கள் வழங்குகிறோம். தீ ஏன், எப்படி ஏற்படுகிறது, அதை அணைக்கும் முறை மற்றும் கிடைக்கும் கருவிகளைக் கொண்டு தீயை அணைப்பது எப்படி என்பது பற்றியும் கற்பிக்கப்படுகிறது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
'Skuad Bomba' அமைப்பது பள்ளிகளுக்குப் பயனளிப்பது மட்டுமல்லாமல், உண்மையான தீயணைப்புப் படை வரும் வரை ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளைச் செயல்படுத்துவதற்கும் தங்கள் துறைக்கு உதவுகிறது என்று அவர் விளக்கினார்.
இந்த குழுக்களிடமிருந்து ஆரம்பக்கட்ட தகவல்கள் கிடைப்பதால், மீட்பு மற்றும் தீயணைப்புப் பணிகள் விரைவாகவும் சுமுகமாகவும் நடைபெறுகின்றன, இது மற்ற செயல்முறைகளை எளிதாக்குகிறது.
"இந்தக் குழு உறுப்பினர்கள் தீயணைப்புத் துறைக்கு உதவும் முதல் குழுவாகச் செயல்படுகிறார்கள். நாங்கள் வந்தவுடன், எந்தப் பகுதி தீப்பிடித்துள்ளது என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள், எனவே உடனடியாக அணைக்கத் தொடங்கலாம். பயிற்சி அளிக்கும்போது, திடலில் கூடும் உத்திகளையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்."
"பாதிக்கப்பட்டவர்கள் எங்கு ஒன்று சேர்க்கப் பட்டுள்ளனர் என்பதை எளிதாக அறிந்து கொள்ள, அவர்கள் திடலில் இருக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களை விரைவில் காப்பாற்ற இந்தத் தகவல் முக்கியம்," என்று அவர் விளக்கினார்.
தஃபீஸ் மையங்களிலிருந்து இந்த ஸ்குவாட் அமைப்பிற்கு அதிகக் கோரிக்கை உள்ளது, ஆனால் நேரம் மற்றும் முக்கியப் பணிகளின் பொறுப்புகள் உள்ளிட்ட சில கட்டுப் பாடுகளால் தங்கள் துறைக்குச் சிக்கல்கள் இருப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும், 'Skuad Bomba'-க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஒவ்வொரு தீயணைப்பு மண்டலமும் ஆண்டுக்கு இரண்டு பள்ளிகளுக்கு இந்த பயிற்சியை வழங்க வேண்டும் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இலக்கு நிர்ணயித்துள்ளது.
"பள்ளிகளிடமிருந்து மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை; தீ விழிப்புணர்வை அதிகரிக்க எங்கள் சேவைகளையும் அறிவையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்."
"இது சமூகத்திற்கான எங்கள் முயற்சி. அவசரகாலத்தில் இந்தக் குழு உண்மையில் உதவ முடியும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் தஃபீஸ் பள்ளிகளில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, சமூகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் கவனம் செலுத்துகிறோம்," என்றார்.
2025 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தில் மூன்று தஃபீஸ் மையங்கள் மட்டுமே தீ விபத்தில் சிக்கியுள்ளதாக ரசாலி கூறினார். ஆகஸ்ட் 2020-இல் கோலா லங்காட், மாஹாட் இன்டெகிராசி தஃபீஸ் சிலாங்கூர் 40 விழுக்காடு எரிந்தது.
ஜூலை 2023-இல், கோலா லங்காட்டில் உள்ள மாஹாட் தஃபீஸ் ஹருண் அல் மஸ்ரி 70 விழுக்காடு தீ விபத்தையும், டிசம்பர் 2023-இல் அஸ்ராமா தஃபீஸ் சுங்கை லோங் 80 விழுக்காடு தீ விபத்தையும் சந்தித்தன.
"இருப்பினும், இந்த சம்பவங்கள் எதிலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை," என்றார் அவர்.
எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க, சிலாங்கூரில் உள்ள டஜன் கணக்கான தஃபீஸ் பள்ளிகள் 'Skuad Bomba'-வை அமைத்தன
20 மே 2026, 4:25 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?






