ஏசிசி இறுதிப்போட்டி: சொந்த மண்ணில் புரிராம் யுனைடெட்டுக்கு எதிராக சிலாங்கூர் சாதகமான முடிவை நோக்குகிறது

20 மே 2026, 3:11 AM
ஏசிசி இறுதிப்போட்டி: சொந்த மண்ணில் புரிராம் யுனைடெட்டுக்கு எதிராக சிலாங்கூர் சாதகமான முடிவை நோக்குகிறது

பெட்டாலிங் ஜெயா, மே 20 - ஆசியான் கிளப் சாம்பியன்ஷிப் (ஏசிசி) 2025/2026-இன் இறுதிப் போட்டியின் முதல் கட்ட ஆட்டத்தில், நாளை இங்கு நடைபெறும் புரிராம் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில், (சிலாங்கூர்)  'சிகப்பு ராட்சதர்கள்' சொந்த இடத்தில் விளையாடும் சாதகத்தை  பயன்படுத்திக் கொள்வார்கள் என சிலாங்கூர் எஃப்சி அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிம் பான் கோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சதகம் 

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள வாய்ப்பை, சிலாங்கூரின் பெருமைக்காக மட்டுமல்லாமல், தென்கிழக்கு ஆசிய காற்பந்து அரங்கில் மலேசியாவின் பெயரையும் நிலைநாட்ட முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிம் கூறினார்.

"நாங்கள் வெற்றியாளரானால் அது ஒரு சிறந்த விஷயமாக இருக்கும், இது சிலாங்கூரின் பெருமைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பெருமை சேர்க்கும்," என்றார்.

"தென்கிழக்காசியாவில், நாங்கள் எப்போதும் கடுமையாகப் போட்டியிட்டு உழைக்கிறோம். எனவே, இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது, நாங்கள் பெருமையுடன் இருக்க வேண்டும், மக்களும் பெருமைப் படும்படியான ஒன்றை வழங்க வேண்டும்," என்று அவர் இன்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அரங்கில் (MBPJ) நடைபெற்ற போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

காயங்கள் ஏதும் இல்லாத நிலையில் சிலாங்கூர் அணி பாதுகாப்பான அணுகுமுறையைக் கையாளாது என்றும், மாறாக, ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி, சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் முன்னாள் தேசியப் பயிற்றுவிப்பாளரான அவர் கூறினார்.

புரிராம் யுனைடெட் ஏசிஎல் எலைட் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த தென்கிழக்காசியப் பிரதிநிதிகளில் ஒன்றாக மதிக்கப்பட வேண்டியிருந்தாலும், சிலாங்கூர் அணி தனது தாக்குதல் அணுகுமுறையையும் வழக்கமான ஆட்ட பாணியையும் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக வீரர்கள் ஏற்கனவே அதிக உந்துதலுடன் இருப்பதால், அவர்களுக்கு உத்வேகம் அளிக்க அதிகம் பேசத் தேவையில்லை என்று பான் கோன் கூறினார்.

"அவர்கள் ஒரு அணியாக ஒன்று பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எனது வேலை. ஏனென்றால் நாங்கள் அதிக உற்சாகமடைவதை நான் விரும்பவில்லை," என்று 57 வயதான தென் கொரியப் பயிற்றுவிப்பாளர் கூறினார்.

இதற்கிடையில், அரையிறுதியில் நாம் டின் எஃப்சி-யை தோற்கடித்ததன் மூலம் கிடைத்த வெற்றியின் நம்பிக்கையும் உத்வேகமும் நாளைய ஆட்டத்திற்கு அணிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று சிலாங்கூர் அணியின் நடுத்திடல் ஆட்டக்காரர் ஹியூகோ பூமஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

"கடந்த சில வாரங்களாக, நாங்கள் ஒரே மாதிரியான ஒருங்கிணைப்புடன் விளையாடி வருகிறோம். பந்தைக் கட்டுப்படுத்தும் போது வீரர்களிடையே ஒரு வலுவான புரிதலை வளர்த்துக் கொண்டு, எங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துகிறோம்," என்று பிரான்சைச் சேர்ந்த அந்த வீரர் கூறினார்.

புரிராம் யுனைடெட் மற்றும் சிலாங்கூர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் இரண்டாம் கட்ட ஆட்டம் வரும் புதன்கிழமை தாய்லாந்தில் நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.