UEC மாணவர்களுக்கு IPTA சேர்க்கை கடுமையான நிபந்தனைகளுடன் மட்டுமே — பிரதமர்

16 மே 2026, 12:11 PM
UEC மாணவர்களுக்கு IPTA சேர்க்கை கடுமையான நிபந்தனைகளுடன் மட்டுமே — பிரதமர்

ஈப்போ, மே 16 —  பிரதமர் அன்வார்    இப்ராஹிம் சீன மொழி, Unified Examination Certificate (UEC) தகுதி பெற்ற மாணவர்கள் Institusi Pengajian Tinggi Awam (IPTA) பொதுப் பல்கலைக் கழகங்களில் சேர அனுமதிக்கப் படுவது கடுமையான நிபந்தனைகளுக்கு உட் பட்டதாகவே இருக்கும், இது தேசிய கல்வி அமைப்பிற்கு வெளியே உள்ள பிற பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் என்றார்.

பொதுப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக Bahasa Melayu மற்றும் வரலாறு பாடங்களில் கட்டாய தேர்ச்சி பெறுதல் இடம் பெறுகிறது என்று அவர் கூறினார்.“தற்போது சர்வதேச பள்ளிகளுக்கும் நாங்கள் நிபந்தனைகள் விதிக்கிறோம் அல்லவா? அந்தப் பள்ளிகளில் மலாய் மாணவர்கள் உட்பட பல மலேசிய மாணவர்கள் படிக்கிறார்கள்.

ஆகவே அதே நிபந்தனைகளை நாங்கள் பயன் படுத்துகிறோம்.“முன்பு முழு பாடத்திட்டத்தை-யும் அரபு மொழியில் கற்பித்தாலும், மலாய் மொழி மற்றும் வரலாற்றிற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காத Maahad Tahfiz மற்றும் அரபு பள்ளிகளுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப் படுகின்றன.

“அதனால்தான் UEC மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கும் முடிவை எடுத்தோம்,” என்று தேசிய அளவிலான ஆசிரியர் தின விழாவை தொடங்கி வைத்து அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர்டத்தோஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) கல்வி அமைச்சர் ஃபத்லினா  சீடெக்  (Fadhlina Sidek மற்றும்  மற்றும் பேராக் மந்திரி புசார்  சராணி முகமது ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சீன தனியார் பள்ளிகளின் நிலைமை, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது தேசிய ஒற்றுமை நோக்கில் நல்ல மாற்றத்தை கண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

UEC அங்கீகாரம் பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், தற்போது அந்தப் பிரிவைச் சேர்ந்த 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் Sijil Pelajaran Malaysia (SPM) தேர்வை எழுத முன்வருவது ஊக்கமளிக்கும் முன்னேற்றமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்திலும், மறைந்த Abdul Rahman Arshad கல்வி தலைமை இயக்குநராக இருந்தபோதும் UEC பட்டதாரிகள் குறித்து விவாதித்தோம். அப்போது சீன பள்ளிகள் தேசிய கல்வி அமைப்பிலிருந்து முற்றிலும் தனித்துவமாக செயல்பட்டதால் முன்னேற்றம் காண மிகவும் சிரமமாக இருந்தது.

“என்னுடன் நடந்த சில சந்திப்புகளில், ஆசிரியர்கள் ஒரு மலாய் வார்த்தையைக் கூட பேச மறுத்தனர்,” என்றார்.ஆனால் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், தேசிய கல்வி அமைப்பில் ஒற்றுமை மற்றும் திறந்த மனப்பான்மை அதிகரித்துள்ளதாகவும் அன்வார் கூறினார்.சமீபத்திய சந்திப்புகளில் சம்பந்தப்பட்ட சங்கங்களின் அனைத்து பிரதிநிதிகளும் சரளமான மலாய் மொழியில் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.