கல்வி அமைச்சின் ஒதுக்கீடு தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் — அன்வார்

16 மே 2026, 11:22 AM
கல்வி அமைச்சின் ஒதுக்கீடு தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் — அன்வார்

ஈப்போ, மே 16 — பிரதமர் அன்வார் இப்ராஹிம், Ministry of Education Malaysia (MOE) கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசு காலத்திற்கேற்ப தொடர்ந்து பரிசீலித்து அதிகரிக்கும்   என்றார்.

இதில் டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளை பலப்படுத்தும் முயற்சிகளும் அடங்கும்.தேசிய கல்வித் துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப பட்ஜெட் ஒதுக்கீடுகள் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.

“இந்த வார தொடக்கத்தில் Ministry of Finance Malaysia நிதி அமைச்சுடன் நடந்த சந்திப்பிலும் கல்வி தொடர்பாக விவாதித்தோம். தற்போது டிஜிட்டல் மயமாக்கல், AI, கணினி கல்வி மற்றும் STEM ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.“இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கல்வி அமைச்சிற்கு செலவினங்களையும் அனுமதிகளையும் மேலும் அதிகரிக்க தேவையான அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளோம்,” என்று தேசிய அளவிலான ஆசிரியர் தின விழாவை தொடங்கி வைத்து அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது சாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) கல்வி அமைச்சர்   ஃபத்லினா சீடெக் (Fadhlina Sidek மற்றும் சராணி முகமது Saarani Mohamad ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், “ மடாணி ” அரசாங்கம் ஆசிரியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அதில் 3,500 பள்ளிகளில் ஆசிரியர் அறைகளை பராமரித்து மேம்படுத்தும் திட்டமும் அடங்குவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

“ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆசிரியர் அறைகள் மேம்படுத்தப் பட்டும் பராமரிக்கப் பட்டும் வருகின்றன. இதுவரை 7,000 ஆசிரியர் அறைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன,” என்றார்.

2027 கல்வியாண்டு முதல் ஆறு வயது மாணவர்களை முதலாம் ஆண்டில் சேர்க்கும் கொள்கைக்கு இணங்க, கூடுதலாக 3,150 ஆசிரியர்களை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், 4,000-க்கும் அதிகமான ஆசிரியர் குடியிருப்புகள் பராமரிக்கப் பட்டுள்ளதாகவும், கூடுதல் அரசாங்க ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம் 8,700 குடியிருப்புகள் பராமரிக்கப் படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு முன் உரையாற்றிய கல்வி அமைச்சர் ஃபத்லினா சீடெக், நாடு முழுவதும் ஆசிரியர் அறைகளை பராமரித்து மேம்படுத்துவதற்காக கூடுதலாக RM100 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும், ஆசிரியர் குடியிருப்புகளின் பராமரிப்புக்காக மேலும் RM50 மில்லியன் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.