IADA சிறப்பு கவுன்டர்கள் திறந்து நெல் விவசாயிகளுக்கு டீசல் அனுமதி பெற உதவி

16 மே 2026, 4:28 AM
IADA சிறப்பு கவுன்டர்கள் திறந்து நெல் விவசாயிகளுக்கு டீசல் அனுமதி பெற உதவி

IADA சிறப்பு கவுன்டர்கள் திறந்து நெல் விவசாயிகளுக்கு டீசல் அனுமதி பெற உதவி

கிள்ளான்,  மே 15 — ஒருங்கிணைந்த விவசாய மேம்பாட்டு பகுதி Integrated Agricultural Development Area (IADA) வடமேற்கு சிலாங்கூர், நெல் விவசாயிகள் மற்றும் நெல் அறுவடை இயந்திர இயக்குநர்கள் டீசல் வாங்குவதற்கு சிறப்பு அனுமதி பெற விண்ணப்பிக்க உதவும் வகையில், மே 19 முதல் 21 வரை சிக்கிஞ்சான் Sekinchan உட்பட நான்கு இடங்களில் சிறப்பு கவுன்டர்களை திறக்கவுள்ளது.

வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் – முகமது பின் சாபு - அறுவடை இயந்திர இயக்குநர்கள் தினசரி 20 லிட்டர் டீசல் மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுவதாக புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

ஆனால் அறுவடைப் பணிகளுக்கு இதைவிட அதிக எரிபொருள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.“ஒரு நாளுக்கு 200 லிட்டர் டீசலுக்கு விண்ணப்பித்தால், Ministry of Domestic Trade and Cost of Living (KPDN) அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் இந்த விஷயம் அதன் அதிகார வரம்புக்குள் வருகிறது. டீசல் மற்ற தொழில்களிலும் பயன்படுத்தப் படுகின்றது.

“வடமேற்கு சிலாங்கூர் IADA, மே 19 முதல் நான்கு இடங்களில் கவுன்டர்களை திறந்து, சிறப்பு அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பும் நெல் விவசாயிகளுக்கு உதவி செய்யும்,” என்று அவர் இன்று நடைபெற்ற Kota Raja Smart Pineapple Harvest Pilot Project தொடக்க விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று வெளியான செய்திகளின்படி, Sekinchan, Sungai Leman, Sungai Nipah மற்றும் Pasir Panjang பகுதிகளில் உள்ள சுமார் 6,000 ஹெக்டேர் நெல் வயல்கள், நெல் இயந்திர உரிமையாளர்கள் டீசல் விநியோகத்தைப் பெறுவதில் சிரமம் எதிர்கொண்டதால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன.

எரிபொருள் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப் படாவிட்டால், சுமார் 2,900 நெல் விவசாயிகளை பாதிக்கும் இந்த நிலைமை, ஒரு பருவத்திற்கு 42,000 டன் வரை நெல் உற்பத்தி குறைவதற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அரிசி விநியோக நிலை குறித்து முகமது சாபு கூறுகையில், தற்போதைய கையிருப்பு நிலைமை ஸ்திரமாக இருப்பதாகவும், இந்த ஆண்டின் இறுதி வரை போதுமான அளவில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு முடிவுவரை கையிருப்பு நிலைமை நிலையாக உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியிலும் அதை மேலும் நிலைநிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தேவையற்ற அளவில் அதிகமாக வாங்க வேண்டாம், அச்சப்படவும் வேண்டாம்,” என்றார்.

இதற்கு முன்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த திட்டத்தின் முதல் அறுவடை வெற்றி, அரசு, தொழில்துறை மற்றும் சமூகத்தினருக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்கும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிப்பதாக கூறினார்.

2024 ஆகஸ்டில் தொடங்கிய இந்த திட்டத்தின் கீழ், Lembaga Perindustrian Nanas Malaysia (LPNM), 13 பங்கேற்பாளர்களுக்கு 392,000-க்கும் அதிகமான MD2 அன்னாசி செடிகன்றுகளை வழங்கியுள்ளதாகவும், இது 10.40 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2.4 ஹெக்டேர் பரப்பளவிலான MD2 அன்னாசி தோட்ட திட்டத்தின் செலவுகள் மற்றும் வருமான மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த திட்டம் RM357,840 மொத்த வருமானத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

“இன்னும் சிறப்பான விஷயம் என்னவெனில், இந்த திட்டத்தின் நிகர லாபம் சுமார் RM173,534 என மதிப்பிடப்பட்டுள்ளது. மாதாந்திர நிகர வருமானம் RM9,641 வரை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இது, உயர்தர அன்னாசி தொழில் நிலையான வருமான ஆதாரமாகவும் உள்ளூர் விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தக்கூடியதாகவும் இருப்பதை தெளிவாக காட்டுகிறது,” என்றார்.

மேலும், இத்தகைய வேளாண்மை திட்டங்கள் பாதியிலேயே நிற்காமல் நீண்டகாலம் தொடர வேண்டுமெனில் நிலைத்தன்மை மிகவும் அவசியம் என்றும் முகமது பின் சாபு வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.