ஸ்பெயின், டிரிஸ்டன் டா குன்ஹா வில் புதிய சந்தேக ஹாண்டா வைரஸ் பாதிப்புகள் கண்டறிதல்

10 மே 2026, 3:18 AM
ஸ்பெயின், டிரிஸ்டன் டா குன்ஹா வில் புதிய சந்தேக ஹாண்டா வைரஸ் பாதிப்புகள் கண்டறிதல்

ஆம்ஸ்டர்டாம், மே 8 — ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார நிபுணர்கள் அவசர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பரவல் தொடங்கிய ஆடம்பர கப்பலிலிருந்து வெகு தொலைவில் உள்ள இரண்டு புதிய சந்தேக நோயாளிகள் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளனர்.

புதிய தகவல்களில், கப்பலை விட்டு வெளியேறிய பிறகு உடல்நலக் குறைவுக்கு ஆளான ஒருவர் மற்றும் விமானத்தில் தொற்றுக்குள்ளான கப்பல் பயணியரின் அருகில் அமர்ந்திருந்த பின்னர் நோயுற்ற ஒரு பெண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சம்பவங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இரண்டு இடங்களில் — ஒன்று Spain-இலும் மற்றொன்று தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தொலைதூர தீவான Tristan da Cunha-விலும் — பதிவாகியுள்ளன.

இவை, டச்சு கொடியுடன் பயணித்த MV Hondius கப்பலில் நோயுற்றதாக World Health Organization (WHO) பதிவு செய்த எட்டு பேரிலிருந்து தனித்தனியான சம்பவங்களாகும்.

அந்த எட்டு பேரில் மூவர் உயிரிழந்துள்ளனர். WHO அதிகாரிகள் தெரிவித்ததாவது, சந்தேகிக்கப்பட்ட எட்டு பேரில் ஆறு பேருக்கு ஹாண்டா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுவாக எலிகள் போன்ற கொறிக்கும் விலங்குகள் மூலம் பரவும், உயிருக்கு ஆபத்தான நோயாகும்.

கப்பலுக்கு அப்பால் பல தொலைதூர இடங்களில் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு இருப்பதாக, வைரஸ் மேலும் பரவக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், WHO அதிகாரிகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஆபத்து அதிகம் இல்லை என்றும், இந்த வைரஸ் எளிதில் மனிதர்களிடையே பரவுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

“இந்த பரவலின் தன்மை, கப்பலில் உள்ளவர்களிடமும் கப்பலை விட்டு வெளியேறியவர்களிடமும் இது எவ்வாறு பரவுகிறது அல்லது பரவவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளது என்று தொடர்ந்து கருதுகிறோம்,” என்று WHO-வின் வைரஸ் அச்சுறுத்தல் தொழில்நுட்ப அதிகாரி Anais Legand ஆன்லைன் விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.

WHO தகவலின்படி, Hondius கப்பலில் ஏற்பட்ட இந்த பரவல், மனிதர்களுக்கிடையே வரையறுக்கப்பட்ட அளவில் பரவக்கூடிய ஒரே ஹாண்டா வைரஸ் வகையான Andes virus-ஐச் சேர்ந்ததாக பரிசோதனைகள் உறுதிப் படுத்தியுள்ளன.

இது நெருங்கிய மற்றும் நீண்ட நேர தொடர்பு மூலம் பரவக்கூடும்.United Nations சுகாதார அமைப்பு தெரிவித்ததாவது, அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப் படுபவர்களில் உயிரிழப்பு விகிதம் 50 சதவீதம் வரை இருக்கக்கூடும்.

கப்பலில் மொத்தம் 147 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை, பல பயணிகளுக்கு கடுமையான சுவாச நோய் அறிகுறிகள் இருப்பது முதன்முதலாக WHO-வுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதற்குள், மேலும் 34 பயணிகள் கப்பலை விட்டு வெளியேறியிருந்தனர். இந்த கப்பல் மார்ச் மாதத்தில்  அர்ஜென்டினாவில் வில் இருந்து புறப்பட்டு, அண்டார்டிகா மற்றும் பிற பகுதிகளில் தங்கியபின், ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள Cape Verde கடற்பரப்பை நோக்கிச் சென்றது.

வைரஸ் பரவல் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்த வாரம் அந்த கப்பல் அங்கு தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் நான்கு நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கப்பலை இயக்கும் ஓசியன் அவோய்டு  எக்பெடிஷன்  (Oceanwide Expeditions) நிறுவனம், சாத்தியமான தொற்று அறிகுறிகளுடன் யாரும் தற்போது கப்பலில் இல்லை என்று வியாழக்கிழமை தெரிவித்தது.

Hondius கப்பல் தற்போது Tenerife நோக்கி பயணித்து வருகிறது. அது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு இறங்கும் பயணிகள் மற்றும் பணியாளர்கள், WHO மற்றும் பிற சுகாதார அமைப்புகள் இறுதி செய்து வரும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.