UFO தொடர்பாக முதல் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா

10 மே 2026, 2:46 AM
UFO தொடர்பாக முதல் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா

அமெரிக்கா, மே 9 — அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் (UAP), பொதுவாக UFO (அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்) என அழைக்கப் படுபவற்றை பற்றி முன்னர் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அரசாங்க ஆவணங்கள் முதல் தொகுப்பை அமேரிக்க அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது என்று  அனடோலு ஏஜன்  Anadolu Agency (AA) செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிய பச்சை நிற விண்வெளி உயிரினங்கள் மற்றும் ஏலியன்கள் குறித்து ஹாலிவுட் திரைப்படங்களில் பல கதைகளுக்கு தூண்டுதலாக இருந்த இந்த மர்ம நிகழ்வைச் சுற்றியுள்ள புதிய வெளிப்படைத்தன்மை முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்த வெளியீட்டை, அமெரிக்க பாதுகாப்புத் துறை “Presidential Unsealing and Reporting System for UAP Encounters (PURSUE)” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்தது. இந்த இடை அமைப்பு திட்டத்தில், வெள்ளை மாளிகை தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகம், நாசா NASA, எப்பிஐ FBI, எரிசக்தித் துறை மற்றும் பென்டகனின் All-domain Anomaly Resolution Office ஆகியவை இணைந்துள்ளன.

அறிக்கையின்படி, தற்போது ரகசிய நீக்கம் செய்யப் பட்டுள்ள வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் அரசாங்க ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் புதிய ஆன்லைன் தளத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. மேலும் ஆவணங்கள் படிப்படியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

“முழுமையான வெளிப்படைத்தன்மை” என்ற நோக்கில், UFO தொடர்பான அரசாங்க ஆவணங்களை ரகசிய நீக்கம் செய்யத் தொடங்க வேண்டும் என்ற அதிபரின் டோனல்ட் டராமின்  உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அனைத்து ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வெளியிடப்பட்ட பல ஆவணங்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth கூறுகையில், இந்த ஆவணங்கள் நீண்டகாலமாக மறைக்கப் பட்டிருந்ததாலும், பொது மக்களிடையே பல்வேறு ஊகங்களை உருவாக்கியிருந்ததாலும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார்.

தேசிய உளவுத்துறை இயக்குனர் Tulsi Gabbard கூறுகையில், UFO தொடர்பான அரசாங்க ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு “அதிகபட்ச வெளிப்படைத் தன்மை” வழங்குவதற்காக உளவுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார்.

Kash Patel இந்த வெளியீட்டை “வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னேற்றம்” என்று வர்ணித்தார். அதேவேளை, Jared Isaacman, விளக்கம் அளிக்க முடியாத நிகழ்வுகளை அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்ய நாசா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ரகசிய நீக்கம் செய்யப்பட்ட UFO ஆவணங்கள் தொடர்ந்து கட்டங்களாக வெளியிடப்படும் என்றும் அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.