ஈப்போவில் மூதாட்டி வெட்டிக் கொலை

5 மே 2026, 5:58 AM
ஈப்போவில் மூதாட்டி வெட்டிக் கொலை

ஈப்போ, மே 5 – நேற்று தாமான் டேசா அமான், பெர்சியாரான் பெகோ அமான் 2-இல் உள்ள வீடொன்றில் மூதாட்டி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகனிடமிருந்து இது குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக ஈப்போ மாவட்டக் காவல்துறை தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் நஜிப் ஹம்சா தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் மூதாட்டி கிடப்பதைக் கண்டனர். அவரது உடல், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கத்தியையும் (Parang) காவல்துறையினர் அங்கிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக, மூதாட்டியின் அண்டை வீட்டுக்காரரான 52 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பூர்வாங்க விசாரணையில், கைது செய்யப்பட்ட அந்த நபர் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் உலு கிந்தாவில் உள்ள பஹாகியா மருத்துவமனையில் (HBUK) மனநலச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

கொலைக்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறை இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், ஈப்போ மாவட்டக் காவல்துறை தலைமையகத்தைத் (IPD Ipoh) தொடர்பு கொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு முகமட் நஜிப் கேட்டுக்கொண்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.