பிளஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து விபத்து: மூவர் காயம்

4 மே 2026, 8:59 AM
பிளஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து விபத்து: மூவர் காயம்

அலோர் காஜா, மே 4: இன்று காலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (PLUS) 213.4-ஆவது கிலோமீட்டரில், தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில், இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் லேசான காயமடைந்தனர்.

இன்று காலை 10.18 மணியளவில் இந்த விபத்து குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாக மலாக்கா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) மண்டலம் 2-இன் தலைவர், உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் சுல்கைரானி ரம்லி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அலோர் காஜா தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 வீரர்கள் அடங்கிய குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

"மீட்புக் குழுவினர் அங்கு சென்றபோது, 'டொயோட்டா ஹேய்ஸ்' (Toyota Hiace) ரகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று சாலையோரம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த வாகனத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த எட்டுச் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரும் பயணம் செய்துள்ளனர்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில் இந்தியச் சிறுவர்கள் இருவர் மற்றும் உள்ளூர் ஓட்டுநர் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மூவரும் மேலல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் எவ்விதக் காயமுமின்றி தப்பினர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகளை வழங்கியதுடன், விபத்தினால் கடும் அதிர்ச்சிக்குள்ளான (Trauma) பயணிகளுக்குத் தேவையான ஆரம்பக்கட்ட உளவியல் ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கினர். விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.