கோல சிலாங்கூர் மாவட்டம் (LMS) பிரிவில் 95.16 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

3 மே 2026, 9:32 AM
கோல சிலாங்கூர் மாவட்டம் (LMS) பிரிவில் 95.16 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஷா ஆலம், மே 2: எஸ்பிஎம் 2025 தேர்வில், சிலாங்கூர் மாநிலத்திலேயே கோல சிலாங்கூர் மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) ‘சான்றிதழ் பெறத் தகுதியானவர்கள்’ (LMS) பிரிவில் 95.16 விழுக்காடு தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இம்மாவட்டம், மாநிலத்தின் இரண்டாவது சிறந்த மாவட்ட சராசரி தரத்தை (GPD) 4.27 புள்ளிகளுடன் பதிவு செய்துள்ளது.நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பயனளிக்கும் சிலாங்கூர் மக்கள் பயிற்சித் திட்டம் (PTRS) உட்பட, மாநில அரசின் கல்வித் தலையீட்டுத் திட்டங்களின் செயல்திறனை இந்தச் சாதனை நிரூபிப்பதாக சிலாங்கூர் மந்திரி புசார்  அறக்கட்டளையின் (MBI) தலைவர், அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.

கிராமப்புறங்களில் மாநில அரசின் பயிற்சித் திட்டம் சென்றடைவதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கோல சிலாங்கூர் மாவட்ட கல்வி அலுவலகத்தின் இந்த வெற்றி முறியடித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாறாக, செயல்படுத்தப் பட்ட முழுமையான அணுகுமுறை மாணவர்களின் கல்வித் திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும்.“கோல சிலாங்கூரின் சில பகுதிகள் கிராமப்புறங்களில் அமைந்திருந்தா-லும், மேம்படுத்தப் பட்ட இணைய வசதி மற்றும் நாங்கள் செயல் படுத்திய பிடிஆர்எஸ் போன்ற திட்டங்கள் மூலம் எஸ்பிஎம் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த முடிந்துள்ளது.

“எங்களிடம் தரவுகள் உள்ளன; நாங்கள் வெற்றுப் பேச்சு பேசவில்லை. இந்த வெற்றி, கூறப்பட்ட கருத்துகள் தவறானவை என்பதை நிரூபிக்கிறது. இணைய வசதி மேம்பட்டு வருகிறது. ஏதேனும் பகுதிகளில் இணைப்புச் சிக்கல்கள் இருந்தால், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (SKMM) நேரடியாகத் தெரிவிக்கலாம், அவர்கள் அதைச் சரி செய்வார்கள்.

“நாங்கள் செயல்படுத்திய பிடிஆர்எஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பதை கோலசிலாங்கூர் மாவட்டத்தின் எஸ்பிஎம் 2025 முடிவுகள் நிரூபித்துள்ளன,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் நூருல் ஷஸ்வானி நோ, கிராமப் புற மாணவர்களி-டையே தகவல் பரிமாற்றம், வசதிகள் மற்றும் இணைய அணுகல் ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளால் பிடிஆர்எஸ் முயற்சி சவால்களை எதிர் கொள்வதாகக் கூறிய கருத்துக்கு அகமது அஸ்ரி பதிலளித்தார்.

கோல சிலாங்கூரில் உள்ள மூன்று இடைநிலைப் பள்ளிகளான எஸ்எம்கே கோல சிலாங்கூர் மற்றும் எஸ்எம்கே பெங்காலான் பெர்மாத்தாங் ஆகியவற்றில் தலா 84 மாணவர்கள் பிடிஆர்எஸ் இணையத்தளமான இ-பிடிஆர்எஸ்-இல் பதிவு செய்துள்ளதாகவும், எஸ்எம்கே தீராம் ஜெயாவில் 45 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.

ஈபிடிஆர்எஸ் தளம் மூலம் வழங்கப்படும் இணையவழி வகுப்புகள் மற்றும் பாடத் தொகுப்புகளைத் தவிர, நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் அனைவருக்கும் எட்டு முக்கிய பாடங்களை உள்ளடக்கிய அச்சிடப்பட்ட பாடத் தொகுப்புகளும் கற்றல் துணைப் பொருட்களாக வழங்கப் படுகின்றன. “அனைத்து மாணவர்களுக்கும் அச்சிடப்பட்ட பாடத்தொகுப்புகள் கிடைக்கின்றன.

ஆசிரியர்களும் பிடிஆர்எஸ் பாடத் தொகுப்புகளை தங்கள் கற்றலில் கூடுதல் பொருளாகப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். “பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் தன் பகுதியில் சிக்கல் இருப்பதாகக் கூறினால், பெர்மாத்தாங் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் - தான் உள்ளது.

எங்களிடம் தரவுகள் உள்ளன. கோல சிலாங்கூரின் வெற்றி, கோம்பாக் போன்ற நகர்ப்புற மாவட்டங்களை விடவும் சிறப்பாக உள்ளது என்பதே ஆதாரம்,” என்றார் அவர்.

இருப்பினும், இணைய அணுகல் சிக்கல்கள் இருந்தால், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) போன்ற தொடர்புடைய நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிப்பது உட்பட, ஒரு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட எம்.பி.ஐ அறக்கட்டளை தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக, எஸ்பிஎம் தேர்ச்சிக்கு பிடிஆர்எஸ் திட்டம் ஆற்றிய பங்களிப்பிற்காக, சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையிடமிருந்து எம்.பி.ஐ அறக்கட்டளை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பாராட்டு கடிதங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.