புத்ராஜெயா, மே 2: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு வெளிநாட்டு ஆடவர்களை இன்று அதிகாலை போலீசார் தடுத்து வைத்தனர்.
சமூக ஊடகங்களில் பரவலான காணொளியில் விமான நிலையப் பகுதியில் பிச்சை எடுப்பதாக காட்டப்பட்ட நபர்கள்தான் 28 மற்றும் 45 வயதுடைய அவ்விரு சந்தேக நபர்களும் என நம்பப் படுவதாக கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். ரவி கூறினார்.
விசாரணையில், தஜிகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அவ்விரு சந்தேக நபர்களிடமும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
"விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை அணுகி, அனுதாபத்தை ஈர்த்து பணம் கேட்பதே இவர்களின் செயல்பாட்டு முறையாகும்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்வழக்கு குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பிச்சை எடுத்தவர்கள் கைது
2 மே 2026, 3:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கே.எல்.ஐ.ஏ (KLIA) ஏரோட்ரெயின் சேவை: இந்த மாத இறுதிக்குள் 24 மணி நேரமும் இயங்கும் - அந்தோணி லோக்
Shalini Rajamogun
5 மே 2026

selangor
குற்றவியல் பதிவுகள் 31 கொண்ட ஆடவரைத் துரத்திச் சென்ற போலீசார் அனைத்துலக விமான நிலைய (கேஎல்ஐஏ) பகுதியில் கைது செய்தனர்
Pakiya
31 மார்ச் 2026

national
KLIA ஏரோட்ரெயின் சேவை மீண்டும் 100 விழுக்காடு தயார் - அந்தோணி லோக்
Shalini Rajamogun
12 மார்ச் 2026

national
KLIA விமான நிலையத்தில் Cuscus விலங்குகள் கடத்தல் முறியடிப்பு
Evelyn Moses
6 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




