கோலாலம்பூர், மே 2: குழந்தைகளின் ஆரம்பக் கல்வியின் தரம் சமமாக இருப்பதை உறுதி செய்ய, அனைத்து அரசாங்க மற்றும் தனியார் மழலையர் பள்ளிகளிலும் பாடத்திட்டம் தரப் படுத்தப்பட வேண்டும் என்று கல்வி நிபுணர் பேராசிரியர் டத்தின் டாக்டர் மரியானி எம்.டி. நூர் கூறினார்.
செகி பல்கலைக்கழகத்தின் (Universiti SEGi) தற்காலிக துணைவேந்தரான அவர், இன்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2026 பூமிபுத்ரா கல்வி மாநாட்டில் முன்வைத்த ஏழு தீர்மானங்களில் இந்த பரிந்துரையும் அடங்கும் என்றார்.
தற்போது, கேமாஸ் (KEMAS), பெர்பாடுவான் (Perpaduan) மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. தேசிய மழலையர் பள்ளி பாடத்திட்டத்தை உருவாக்கும் போது விரிவான விவாதங்கள் நடத்தப்பட்ட போதிலும், அவை வெவ்வேறு பாடத் திட்டங்களைப் பயன்படுத்துகின்றன.
"எனவே, அந்தப் பாடத்திட்டங்களை நாம் தரப்படுத்தி, மழலையர் பள்ளிக் கல்வியில் உள்ள 'தரப் பாகுபாடுகளை' அகற்றுவோம்," என்று அவர் 'மழலையர் பள்ளிக் கல்வியை வலுப்படுத்துதல்' எனும் அமர்வில் பேசுகையில் கூறினார்.
மேலும், வெளிநாட்டு கல்வி முறைகளைப் போலவே, மழலையர் பள்ளி ஆசிரியர்களின் தொழிலை ஓர் அதிகாரப்பூர்வ தொழிலாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மரியானி அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தார். வெளிநாடுகளில் இந்தத் தொழில் முனைவர் பட்டம் வரை உயர் மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் திறனைத் தொடர்ந்து கண்காணிப்பதும், குறிப்பாகச் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காகப் பெற்றோருக்கான ஆதரவு அமைப்பை வலுப் படுத்துவதும் அவசியம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
"எனவே, இந்தக் குழந்தைகள் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டு, மற்ற இயல்பான குழந்தைகளைப் போலவே அவர்களுக்கு வழிகாட்ட ஒரு வலுவான தலையீட்டு முறை இருக்க வேண்டும்," என்றார்.
தரமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வலியுறுத்துவதோடு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்நுட்பக் கல்வி உள்ளடக்க அறிவு (Pengetahuan Kandungan Pedagogi Teknologi) முறை மூலம் ஒருங்கிணைந்த கல்வியை செயல்படுத்த வேண்டும் என்றும் மரியானி பரிந்துரைத்தார்.
பாலர் பள்ளி கலைத்திட்டத்தை சீரமைக்க வேண்டியது அவசியம்; கல்வி இடைவெளியைத் தவிர்க்க நடவடிக்கை
2 மே 2026, 3:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




