கோலாலம்பூர், ஏப்ரல் 30: சிலாங்கூர், கெப்போங், தாமான் ஈசானில் இன்று அதிகாலை ஐந்து தரை வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பிரிவு உதவி இயக்குனர் அகமது முக்லிஸ் மொக்தார், அதிகாலை 2.31 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து செலாயாங், ரவாங், ஜிஞ்சாங் மற்றும் மஞ்சளாரா தீயணைப்பு நிலையங்களில் இருந்து 27 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த தாகக் கூறினார்.
"இந்த தீ விபத்தில், படுக்கை அறையில் உள்ள கட்டிலில் ஆடவர் ஒருவர் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தில் சம்பந்தப்பட்ட வீடுகள் 20 முதல் 100 விழுக்காடு வரை சேதமடைந்ததாகவும், இரண்டு கார்கள் முழுமையாக எரிந்து நாசமான தாகவும் அகமது முக்லிஸ் கூறினார்.
காலை 3.42 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மீட்புக் குழுவினர், காலை 7.15 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மலேசிய அரச காவல்துறை (PDRM) வசம் ஒப்படைக்கப்பட்டது அகமது முக்லிஸ் தெரிவித்தார்.
-- பெர்னாமா
கெப்போங்கில் ஐந்து வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் உடல் கருகி மரணம்
30 ஏப்ரல் 2026, 6:43 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சிரம்பான், மந்தினில் மாடி வீட்டு தீயில் சிக்கிய மாற்றுத்திறனாளிப் உடல் கருகி மரணம்
Pakiya
4 ஏப்ரல் 2026

national
மூழ்கியதாக அஞ்சப்படும் வெளிநாட்டு மாணவரைத் தேடும் பணி தொடர்கிறது - தீயணைப்புத் துறை
PAKIYA
17 பிப்ரவரி 2026

national
எல்லா மாநிலங்களிலும் வெள்ளம் வந்தாலும் போம்பா (தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை) தயார் நிலையில் உள்ளது
Pakiya
30 நவம்பர் 2025

selangor
மரத்தில் மோதிய கார் தீப்பற்றி இருவர் கருகி உயிரிழப்பு
Evelyn Moses
22 அக்டோபர் 2025

உங்கள் கருத்து என்ன?




