ஷா ஆலம்: சமூக ஊடகங்களில் சமீபத்தில் பரவலான, அதிகாலை வேளையில் பட்டாசுகள் கொளுத்தி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஷா ஆலம் மாவட்ட காவல் துறைத் தலைவர் ராம்சே எம்போல் கூறுகையில், இங்குள்ள செத்தியா ஆலம் சமூகப் பாதை பொது வாகன நிறுத்துமிடத்தில் திருமண புகைப்பட அமர்வுக்காக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கொளுத்தப்பட்ட பட்டாசுகள் சுமார் 50 முதல் 100 முறை தொடர்ச்சியாக சக்திவாய்ந்த வெடிப்புகளை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.
"பரவலாக காணொளியில், இந்தச் சம்பவம் ஏப்ரல் 26ஆம் தேதி அதிகாலை 1.05 மணியளவில் நிகழ்ந்திருப்பதும், மூன்று தொடர் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட இருப்பது தெரிகிறது. இதே சம்பவம் ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலை 2.11 மணியளவில் மீண்டும் நிகழ்ந்துள்ளது," என்றார் அவர்.
"இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு ஒரு போலீஸ் புகார் பெறப்பட்டது," என்று அவர் இன்று அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து தகவல் தெரிந்தவர்கள், விசாரணைக்கு உதவ குற்றப் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் சித்தி மஹாட்டை 019-2522 905 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராம்சே கூறினார்.
இந்த வழக்கு 1955ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 13 மற்றும் 1957ஆம் ஆண்டு வெடிபொருட்கள் சட்டத்தின் பிரிவு 7-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பட்டாசு கொளுத்திய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்
30 ஏப்ரல் 2026, 3:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




