2030-க்குள் 4,000 மின்சார வாகன மின்னேற்றிகளை அமைக்க சிலாங்கூர் இலக்கு

27 ஏப்ரல் 2026, 7:12 AM
2030-க்குள் 4,000 மின்சார வாகன மின்னேற்றிகளை அமைக்க சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஏப்ரல் 27: மாநிலத்தில் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2030-ஆம் ஆண்டுக்குள் 4,000 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை (EVCB) நிறுவ சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

இயக்கப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர்
இங் ஸீ ஹான் கூறுகையில், தற்போது சிலாங்கூர் முழுவதும் 12 உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் 1,090 மின்சார வாகன (EV) மின்னேற்றும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்
) 226 அலகுகளுடன் அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து காஜாங் நகராண்மை கழகம் 221 அலகுகளையும், சிப்பாங் நகராண்மை கழகம் 183 அலகுகளையும் கொண்டுள்ளன.

மேலும், சுபாங் ஜெயா மாநகராட்சியில் 145 அலகுகளும், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் 68 EVCB அலகுகளும் உள்ளன.

செலாயாங் நகராண்மை
கழகம் 53 அலகுகளையும், அம்பாங் ஜெயா நகராட்சி 49 அலகுகளையும், கோல லங்காட் நகராட்சி 47 அலகுகளையும் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கோல சிலாங்கூர் நகராண்மை
கழகம் மற்றும் கிள்ளான் அரச மாநகராட்சி தலா 43 அலகுகளைக் கொண்டுள்ளன. உலு சிலாங்கூர் நகராட்சியில் 12 அலகுகளும், சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்தில் ஒரு அலகும் உள்ளன.

"மின்சார வாகனத் துறையை ஊக்குவிக்க, மாநில அரசு உள்ளூராட்சி மன்றங்கள் மூலம், திட்டமிடல் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு EV மின்னேற்றி உள்கட்டமைப்பை அமைப்பதை ஒரு நிபந்தனையாக மாற்றியுள்ளது," என்று அவர் கூறினார்.

"இது பிளான்மலேசியா (PLANMalaysia) வழங்கிய EVCB
நிலையத் திட்டமிடல் வழிகாட்டுதல்களுக்கு இணங்க உள்ளது."

"அதே நேரத்தில், எதிர்காலத்தில் EV மின்னேற்றிகளை நிறுவுவதற்கான திட்டங்களுக்காக, உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் மேற்பார்வையின் கீழ் பொருத்தமான இடங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன," என்று அவர் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சாக் தாவோவின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சிலாங்கூரில் மின்சார வாகன மின்னேற்றும் உள்கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, சார்ஜிங் பாயிண்ட் ஆபரேட்டர்களுக்கு (CPO) ஒருங்கிணைப்பு நிறுவனமாக வேர்ல்டுவைட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டை (WHB) நியமிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

கூடுதலாக, ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஹைட்ரஜன் ஆற்றலில் இயங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரோலைசர் மற்றும் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களின் தயார்நிலையைப் பொறுத்து இது அமையும்.

"இந்த ஆண்டு எலக்ட்ரோலைசர் மற்றும் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்கள் தயாரானால், 2026-ஆம் ஆண்டின் இறுதியில் சிலாங்கூரில் ஹைட்ரஜன் பேருந்துகள் இயக்கப்படுவதைக் காணலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.