மலேசியாவின் 15 பகுதிகளில் கடும் வெயில்: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெட்மலேசியா அறிவுறுத்தல்

27 ஏப்ரல் 2026, 1:43 AM
மலேசியாவின் 15 பகுதிகளில் கடும் வெயில்: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெட்மலேசியா அறிவுறுத்தல்

கோலாலம்பூர், ஏப்ரல் 27: தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கில் உள்ள 15 பகுதிகளுக்கு நிலை 1 அல்லது எச்சரிக்கை நிலையிலான வெப்ப வானிலை நிலவரத்தை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்டுள்ளது.

தீபகற்பத்தில், பெர்லிஸ் மாநிலம் முழுவதும் இவ்வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கெடாவில் குபாங் பாசு, பொக்கோக் சேனா, பெண்டாங், பாடாங்
தெராப், கோத்தா ஸ்டார், கோலா மூடா மற்றும் சிக் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும் என மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பேராக்கில் உள்ள உலு பேராக், கிளந்தானில் உள்ள மாச்சாங் மற்றும் பாசிர் மாஸ் ஆகிய பகுதிகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சபாவில் பியூஃபோர்ட் பகுதியிலும், சரவாக்கில் உள்ள காப்பிட், லிம்பாங் மற்றும் மருடி ஆகிய மூன்று பகுதிகளிலும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பகுதியின் தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸை எட்டும்போது, நிலை 1 அல்லது எச்சரிக்கை நிலை விடுக்கப்படுவதாக MetMalaysia கூறியது.

நாடு முழுவதும் நிலவும் வெப்பமான வானிலை குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற, பொதுமக்கள் அத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான
https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ -ஐப் பார்வையிடலாம்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.