பள்ளிகளின் உள்கட்டமைப்பைச் சீரமைப்பு உதவிக்கு ஏப்ரல் 15- தொடங்கி மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க-பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர்

26 ஏப்ரல் 2026, 2:52 AM
பள்ளிகளின் உள்கட்டமைப்பைச் சீரமைப்பு  உதவிக்கு ஏப்ரல் 15- தொடங்கி மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க-பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலாம், ஏப்ரல் 26: பத்து தீகா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பைச் சீரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான உதவிக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த மாநில அரசாங்கத்தின் முயற்சி, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் வசதியான, பாதுகாப்பான மற்றும் உகந்த கற்றல் சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல்-ரஷீட் ஹரோன் கூறினார்.

“நமது பகுதியில் உள்ள வசதிகளையும் கல்வியின் தரத்தையும் மேம்படுத்த, தேவைப்படும் அனைத்துப் பள்ளிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன்,” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

விண்ணப்பங்களை
https://akses.selangor.gov.my/ என்ற இணையதள இணைப்பு மூலம் மேற்கொள்ளலாம்.

கடந்த ஆண்டு, மாநில அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு பழுதுபார்ப்புப் பணிகளுக்காக பிரத்தியேகமாக ரிம26.624 மில்லியனை ஒதுக்கியது.

இந்த ஒதுக்கீடு, சிலாங்கூர் முழுவதிலும் உள்ள சமயப் பள்ளிகள் உட்பட ஏழு பிரிவுகளில் உள்ள 873 பள்ளிகளுக்குப் பயனளித்தது குறிப்பிடத்தக்கது.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.