ஜாலான் அம்பாங்கில் உள்ள பிரபல வணிக வளாகம் நீர் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்: நீர் விநியோக இணைப்பு உடனடி நடவடிக்கை

24 ஏப்ரல் 2026, 7:04 AM
ஜாலான் அம்பாங்கில் உள்ள பிரபல வணிக வளாகம் நீர் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்: நீர் விநியோக இணைப்பு உடனடி நடவடிக்கை

ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு முக்கிய வளாகத்தில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் இணைப்பை, புகாரின் அடிப்படையில்  ஆயர் சிலாங்கூர் நிரந்தரமாகத் துண்டித்தது.

தேசிய நீர் சேவை ஆணையத்துடன் (SPAN) இணைந்து   ஆயர்   சிலாங்கூர் நேற்று நடத்திய இந்த அமலாக்க நடவடிக்கையில் 15 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாகத் தண்ணீர் பெறுவதற்காகப் பயன்படுத்தப் பட்டதாக நம்பப்படும் சட்டவிரோத இணைப்பு இருப்பது கண்டறியப் பட்டதாக   ஆயர்   சிலாங்கூர் தெரிவித்தது.

"ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு கட்டிடத்தில் சட்டவிரோத நீர் இணைப்பு இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து   ஆயர்   சிலாங்கூர் இந்த நடவடிக்கையை மேற் கொண்டது. சட்ட விரோத இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டு நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டது. மேலும், நீர் இழப்புக்கான இழப்பீடு கோரும் நோட்டீஸ் வளாக உரிமையாளரிடம் வழங்கப் பட்டுள்ளது," என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சட்டவிரோத நீர் இணைப்பு மற்றும் தண்ணீர் திருட்டு ஆகியவை நீர் சேவை தொழில் சட்டம் 2006-இன் (WSIA) கீழ் ஒரு குற்றமாகும் என்று  ஆயர்   சிலாங்கூர் வலியுறுத்தியது.

"இந்தச் செயல் சட்டவிரோதமானது மற்றும் தற்போதுள்ள விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் படலாம்," என்று அது கூறியது.

நீர் விநியோகம் தவறாகப் பயன்படுத்தப் படாமல் இருப்பதை உறுதி செய்ய அமலாக்க முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

"சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள நுகர்வோருக்கு நிலையான நீர் விநியோகத்தைப் பாதுகாப்பதில்  ஆயர்   சிலாங்கூரின் அர்ப்பணிப்பை இந்தத் தொடர் நடவடிக்கைகள் காட்டுகின்றன," என்று நிறுவனம் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.