பொது இடங்களில் ஆக்கிரமிப்பு: சிப்பாங் நகராண்மைக் கழகம் சோதனை - பொருட்கள் பறிமுதல்

24 ஏப்ரல் 2026, 6:22 AM
பொது இடங்களில் ஆக்கிரமிப்பு: சிப்பாங் நகராண்மைக் கழகம் சோதனை - பொருட்கள் பறிமுதல்

ஷா ஆலம், ஏப்ரல் 24: பொது இடங்கள் தடைகள் இன்றி இருப்பதையும், நிர்ணயிக்கப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யும் நோக்கில், பூலாவ் மெராந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிப்பாங் நகராண்மைக் கழகம் (MPSepang) ஆய்வு, ரோந்து மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

சிப்பாங் நகராண்மைக் கழகத்தின்
வடக்கு மண்டல இரவுப் பிரிவின் இந்த நடவடிக்கையானது, வாகன நிறுத்துமிடங்களில் உள்ள தடைகளைக் கண்காணித்து பறிமுதல் செய்வதிலும், வணிக வளாகங்களை ஆய்வு செய்வதிலும், துணைச் சட்டங்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய ரோந்துப் பணிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தியது.

பொதுச் சூழல் மிகவும் ஒழுங்காகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்யவும், பொறுப்பற்ற தரப்பினரால் தவறாகப் பயன்படுத்தப்படாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிப்பாங் நகராண்மைக் கழகம்
தெரிவித்தது.

"இந்த நடவடிக்கையின் விளைவாக, நான்கு அபராத நோட்டீஸ்கள்
வழங்கப்பட்டன. மேலும், நான்கு பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அனுமதியின்றி பொது இடங்களில் வணிகம் தொடர்பான பொருட்களை வைப்பதைத் தடைசெய்யும், 1974-ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின், பிரிவு 46(1)(d)-இன் கீழ் இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்ளூராட்சி மன்றம் தெளிவுபடுத்தியது.

அனைத்து வளாக உரிமையாளர்களும் அனுமதியின்றி பொது இடங்களில் எந்தப் பொருட்களையும் வைக்க வேண்டாம் என்றும், நடைமுறையில் உள்ள துணைச் சட்டங்களுக்கு எப்போதும் இணங்க வேண்டும் என்றும் சிப்பாங் நகராண்மைக் கழகம்
அறிவுறுத்தியுள்ளது.

"அவ்வாறு செய்யத் தவறினால், அபராதம் மற்றும் பறிமுதல் உள்ளிட்ட கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்" என்றும் அது எச்சரித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.