பல்கலைக்கழகப் பகுதிகளில் டிஆர்டி (DRT) சேவையை விரிவுபடுத்தக் கோரிக்கை

24 ஏப்ரல் 2026, 3:24 AM
பல்கலைக்கழகப் பகுதிகளில் டிஆர்டி (DRT) சேவையை விரிவுபடுத்தக் கோரிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 24: பல்கலைக்கழக வளாகங்களுக்கு வெளியே தங்கிப் படிக்கும் மாணவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப போக்குவரத்து சேவையை (DRT) விரிவுபடுத்த வேண்டும் என்று பாலாகோங் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.

காஜாங் நகராண்மைக் கழகத்தின் (MPKJ) நிர்வாகப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான எம்.ஆர்.டி (MRT) ரயில் நிலையங்கள் இருப்பதால் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று வேய்ன் ஓங் சுன் வெய் கூறினார்.

அப்பகுதிகளில் போக்குவரத்து அணுகல் மற்றும் இணைப்பை மேம்படுத்த கூடுதல் துணைச் சேவைகளுக்கான தேவை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிப் பகுதிகளில் டி.ஆர்.டி சேவை விரிவுபடுத்தப்பட்டால், வளாகத்திற்கு வெளியே தங்கியிருக்கும் மாணவர்கள் விரிவுரைகளுக்குச் செல்வது எளிதாக இருக்கும்," என்றார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் (DNS) மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

அதேவேளையில், சிலாங்கூர் மாநிலத்தின் மீட்சித் திறனை வலுப்படுத்தும் தொகுப்புத் திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் 30 வெள்ளி மாதாந்திர மானியம், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதுடன், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் ஒரு சிறந்த முயற்சி என்றும் சுன் வெய் விவரித்தார்.

"இது நாட்டின் எரிபொருளை
பாதுகாக்கவும் உதவும். முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை விரிவுபடுத்துவதற்காக, போக்குவரத்துக்கான நிலையான செயற்குழு (Standco) முக்கிய டி.ஆர்.டி வேன் சேவை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் நான் அறிகிறேன்.

"தற்போதுள்ள போக்குவரத்து வலையமைப்பு வலுப்படுத்தப்படாவிட்டால், வழங்கப்படும் மானியம் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே, இந்த இணைப்பு விரிவாக்கம் மிகவும் அவசியமானதாகும்," என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.