ஷா ஆலாம், ஏப்ரல் 23: காஜாங் பசாரில் நிலவி வரும் கடுமையான வாகன நிறுத்து மிடப் பற்றாக் குறைக்குத் தீர்வு காண, அச்சந்தையை முழுமையாக மீண்டும் மேம்படுத்த காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் பரிந்துரைத்துள்ளார்.
தற்போதுள்ள 92 வாகன நிறுத்துமிடங்கள், சுமார் 160 வியாபாரிகளுக்கும் தினமும் வருகை புரியும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கும் போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார்.
"தினமும் மக்களுக்கு அபராதம் விதிக்கப் படுவதாகவும், வாகனச் சக்கரங்கள் பூட்டப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். இப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் போதுமானது என்று கூறப்பட்டாலும், அது பற்றாக் குறையாகவே உள்ளது என்பது தெளிவாகிறது."
"இதுவரை, வாகன நிறுத்துமிடத்தை அதிகரிக்க உறுதியான திட்டங்கள் எதுவும் முன்மொழியப் படவில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல்களும் சுமூகமாக நடைபெறவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலமில் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்ற பதினைந்தாவது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் முதல் அமர்வில் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் உரையாற்றுகிறார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் (DNS) மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், இப் பிரச்சனைக்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட தரப்பினர் வியாபாரிகளுடன் தீவிர கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்றும் டேவிட் பரிந்துரைத்தார்.
வியாபாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் சந்தையின் மேம்பாடு தொடர்பான எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"இங்குள்ள வியாபாரிகள் 20 முதல் 30 ஆண்டுகளாக வணிகம் செய்து வருகின்றனர். களத்தில் உள்ள உண்மையான தேவைகளை அவர்கள் நன்கு அறிவார்கள்."
"காஜாங் சந்தையை மேம்படுத்த 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வாகன நிறுத்துமிடப் பிரச்சினைக்கு ஏன் இன்னும் தீர்வு காணப்படவில்லை? இப்பிரச்சினையை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. நடைமுறைக்கு உகந்த மற்றும் உடனடித் தீர்வைக் காண வேண்டும்," என்று அவர் கூறினார்.
குறைந்த அளவிலான வாகன நிறுத்துமிட வசதி: காஜாங் சந்தையை மறுசீரமைப்பு செய்ய சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை
23 ஏப்ரல் 2026, 8:03 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
இலவச திவேட் (TVET) பயிற்சி: சிலாங்கூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு திட்டம்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
24 ஏப்ரல் 2026

video
Selangor pergiat saringan awal warga emas, kesan penyakit kronik lebih awal
Kathiravan Manoharan
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூர் முழுவதும் 662 வீடமைப்புத் திட்டங்களில் உள்ள 117,746 மனைகளுக்கு இன்னும் அடுக்குமாடி சொத்துரிமை (hak milik strata) வழங்கப்படவில்லை
Pakiya
22 ஏப்ரல் 2026

selangor
8 மில்லியனுக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை - சிலாங்கூர்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




