வாஷிங்டன், ஏப்ரல் 23 – மேற்கு ஆசியாவில் மோதல் முடிவுக்கு வரும்போது, நாட்டில் பெட்ரோல் விலை குறையும் என எதிர்பார்க்கப் படுவதாக அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸென்ட் புதன்கிழமை தெரிவித்தார்.
செனட் விசாரணையின் போது, பெட்ரோல் விலை எவ்வளவு விரைவில் குறையக்கூடும் என்று கேட்கப் பட்டதற்கு, "எல்லாம் மோதல் எப்போது முடிகிறது என்பதைப் பொறுத்தது," என்று அவர் கூறினார்.
விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் அல்லது இன்னும் குறைவாக கூட இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரான் உட்பட ஈரானில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடங்கின. இது சேதங்களையும் பொது மக்களின் மரணங்களையும் ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேலியப் பகுதிகளையும் மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் தாக்கியது.
இந்த பதற்றம் அதிகரித்ததால், பாரசீக வளைகுடா நாடுகளில் இருந்து உலகச் சந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான ஒரு முக்கிய வழியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து கிட்டத்தட்ட ஸ்தம்பித்தது. இது எரிபொருள் விலைகளை உயர்த்தியது.
ஏப்ரல் 13 அன்று, அமெரிக்க கடற்படை, ஹார்முஸ் ஜல சந்தியின் இருபுறமும் உள்ள ஈரானியத் துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து கடல் போக்குவரத்தையும் தடுக்கத் தொடங்கியது.
ஈரான் அல்லாத கப்பல்கள், தெஹ்ரானில் சுங்கக் கட்டணம் செலுத்தாத வரை அந்தப் பாதையில் தடையின்றிச் செல்லலாம் என வாஷிங்டன் வலியுறுத்தியுள்ளது.
ஈரானிய அதிகாரிகள் சுங்கக் கட்டணம் விதிப்பதை இன்னும் அறிவிக்கவில்லை, ஆனால் அது குறித்த ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு ஆசிய மோதல் முடிவுக்கு வந்த பின்னர் பெட்ரோல் விலை குறையும் என பெஸ்ஸென்ட் கணித்துள்ளது
23 ஏப்ரல் 2026, 2:37 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி: போர்க்களத்தில் "புதிய வியூகங்களை" வெளிப்படுத்த ஈரான் தயார்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

antarabangsa
இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்பு: ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Shalini Rajamogun
20 ஏப்ரல் 2026

antarabangsa
அமெரிக்க-இஸ்ரேல் இடையேயான 40 நாள் போரின் போது 170 ட்ரோன்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது
Shalini Rajamogun
20 ஏப்ரல் 2026

antarabangsa
ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 350-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானின் அனுமதிக்காகக் காத்திருப்பு
Shalini Rajamogun
27 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?


