இஸ்தான்புல், ஏப்ரல் 22 - அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் புதிய பேச்சுவார்த்தைகள் குறித்த நிச்சயமற்ற தன்மையால், உலகளாவிய விநியோகத் தடைகள் ஏற்படலாம் என்ற கவலையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை எரிசக்திப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது என அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 98.50 அமெரிக்க டாலராகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) சுமார் 89.60 அமெரிக்க டாலராகவும் உயர்ந்தது.
ஐரோப்பிய இயற்கை எரிவாயுவின் விலையும் 8.2 விழுக்காடு அதிகரித்து, TTF ஃபியூச்சர்ஸ் ஒரு மெகாவாட்-மணி நேரத்திற்கு சுமார் €43.7 (US$51.3) என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. சந்தைகள் மிகவும் தீவிரமான விநியோகத் தடைகளுக்கான குறைந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டன.
வாஷிங்டன் நேரப்படி புதன்கிழமை மாலையுடன் முடிவடைய விருந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடையக் கூடும் என்ற அபாயத்தை சந்தைகள் மறுமதிப்பீடு செய்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், போர்நிறுத்தத்தை ஈரான் "பலமுறை" மீறி விட்டதாகக் கூறியதோடு, முதலில் ஒரு உடன்பாடு எட்டப் படாவிட்டால் நீட்டிப்பு "மிகவும் சாத்தியமில்லை" என்று குறிப்பிட்டார்.
ஈரானுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் செல்லவிருந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு, வாஷிங்டனில் "கொள்கை தொடர்பான கூடுதல் கூட்டங்கள்" காரணமாக பயணத்தை ஒத்தி வைத்ததைத் தொடர்ந்து சந்தேகங்கள் மேலும் வலுத்தன.
இஸ்லாமாபாத் செல்லவிருந்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெள்ளை மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனிலேயே தங்கியிருந்தார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது குறித்த ஈரானின் முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை கூறியது.
"இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான பிரதிநிதிகள் குழுவை உறுதி செய்வது தொடர்பான ஈரானிய தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ பதில் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது," என்று பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரார் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் எழுதினார்.
இரு தரப்பினரும் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் முதல் சுற்று உயர்மட்ட நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் அது எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்தது.
போர் நிறுத்தம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதிக்கான முக்கிய வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான முன்னேற்றங்களுக்கு எரிசக்தி சந்தை மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக உள்ளது. இராஜதந்திர பதட்டத்தின் ஒவ்வொரு அறிகுறியும் விநியோகம் குறித்த கவலையைத் தூண்டுகிறது.
-- பெர்னாமா
அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் எரிசக்தி விலை உயர்வு
22 ஏப்ரல் 2026, 3:37 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


