கோலாலம்பூர்: உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கம் போக்குவரத்து, தளவாடங்கள், பொருட்களின் விலைகள் மற்றும் மக்களின் தினசரி செலவினங்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. நாடு தற்போது அதிகரித்து வரும் செலவினங்களைச் சரிசெய்யும் ஒரு கட்டத்தை எதிர்கொண்டுள்ளது என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் கூறினார்.
ஏப்ரல் 13 முதல் 19 வரையிலான கால கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கண்காணிக்கப் பட்டதில், விலைகளில் கலவையான மாற்றங்கள் காணப் பட்டதாக அவர் தெரிவித்தார்.
"விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் சீராக இல்லை என்பதையும், அது வானிலை, விவசாய உள்ளீட்டுச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் குறுகிய கால விநியோக ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணிகளால் ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபடுகிறது என்பதையும் இது காட்டுகிறது," என்றார்.
"சாதாரண கோழியின் சராசரி விலை கிலோவுக்கு RM9.09-லிருந்து 2.8 விழுக்காடு அதிகரித்து RM9.33 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மாட்டிறைச்சியின் விலை 5.0 விழுக்காடு குறைந்து கிலோவுக்கு RM35.65 ஆக உள்ளது. தரம் C கோழி முட்டைகள் 10 முட்டைகளுக்கு RM3.66 என்ற நிலையான விலையில் விற்கப் படுகின்றன."
"மீன் மற்றும் காய்கறி வகைகளைப் பொறுத்தவரை, கம்போங் மீனின் விலை ஒரு கிலோவுக்கு RM17.08-லிருந்து RM16.43 ஆகக் குறைந்துள்ளது. கடுகு கீரையின் சராசரி விலை கிலோவுக்கு RM5.89-லிருந்து RM6.21 ஆக அதிகரித்துள்ளது. பச்சை கீரையின் விலை கிலோவுக்கு RM5.26 என்ற நிலையான விலையில் உள்ளது," என்று அவர் இன்று உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த சிறப்பு விளக்கக் கூட்டத்தில் கூறினார்.
மலேசிய புள்ளிவிவரத் துறையின் (DOSM) பதிவின்படி, தீபகற்பத்தில் டீசலின் சராசரி விலை பிப்ரவரியில் லிட்டருக்கு RM2.98 ஆக இருந்தது, தற்போது அது RM4.09 ஆக உயர்ந்துள்ளது. RON97 பெட்ரோலின் விலை RM3.11-லிருந்து RM4.01 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்த நெருக்கடியின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தற்போதைய தரவுகளின் அடிப்படையில் வேகமாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்று அக்மல் நஸ்ருல்லா கூறினார்.
தொழிலாளர் சந்தையைப் பற்றிப் பேசிய அவர், தற்போதைய வேலை இழப்புப் போக்குகள் பெரிய அளவில் அழுத்தத்தைக் காட்டவில்லை என்றாலும், அதனைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றார்.
"கடந்த கால அனுபவங்கள், எரிசக்தி விலை அதிர்ச்சிகளின் தாக்கம் வேலை வாய்ப்புகளில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே வெளிப்படும் என்பதைக் காட்டுகின்றன."
"சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், ஏப்ரல் 2026-இன் முதல் 16 நாட்களில் 4,708 தொழிலாளர்கள் வேலை இழந்ததாகப் பதிவாகியுள்ளது," என்று அவர் கூறினார்.
நிறுவனங்கள் எதிர்கொள்ளும் செலவின அழுத்தம், செயல்பாடுகளைக் குறைப்பதற்கோ அல்லது வேலை ஆட்குறைப்புக்கோ வழிவகுக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு 2026-இன் இரண்டாம் காலாண்டு ஒரு முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்றும் அக்மல் நஸ்ருல்லா விளக்கினார்.
-- பெர்னாமா
உலகளாவிய விநியோக நெருக்கடியின் தாக்கம் பொருள், போக்குவரத்து மற்றும் மக்களின் தினசரி செலவினங்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது
22 ஏப்ரல் 2026, 3:29 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?



