ஷா ஆலம், ஏப்ரல் 21: சிலாங்கூர் மக்கள் சொந்த வீடு வாங்குவதற்கு உதவும் சிறந்த மாற்றுத் திட்டங்களில் ஒன்றாக 'ரூமா சிலாங்கூர்கூ' திட்டம் விளங்குகிறது. இருப்பினும், இருப்பிடம் மற்றும் அடிப்படை பொது வசதிகள் போன்ற காரணிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் மலிவு விலை வீட்டுடைமைக் கொள்கை, குறைந்த வருமானம் கொண்டோரின் சுமையைக் குறைக்கவும், தற்போதைய தேசிய வீட்டுக் கொள்கையின் அமலாக்கத்திற்கு ஆதரவளிக்கவும் உதவுகிறது என்று புத்ரா மலேசியப் பல்கலைக்கழகத்தின் (UPM) மனித சூழலியல் புலத்தின் நகர்ப்புற, வட்டார திட்டமிடல்/சமூக மேம்பாட்டு விரிவுரையாளர் டாக்டர் முகமது முஜாஹீத் ஹசான் கூறினார்.
"எனது ஆய்வின்படி, 2013 அல்லது 2014-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரூமா சிலாங்கூர்கூ திட்டம், மக்கள் சொந்த வீடுகளைப் பெறுவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் செய்துள்ள சிறந்த மாற்றுத் திட்டங்களில் ஒன்றாகும் என்பது தெளிவாகிறது."
"குறிப்பாக ஷா ஆலாம் போன்ற நகர்ப்புறங்களில் சொத்துக்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இந்தத் திட்டம் நகர்ப்புறங்களில் தற்போதுள்ள வீடுகளை வாங்குவதில் சிரமப்படும் மக்களின் சுமையைக் குறைக்கிறது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இருப்பினும், நகர்ப்புறங்களில் நில வளம் குறைவாக இருப்பதால், பல மலிவு விலை வீட்டுத் திட்டங்கள் இப்போது நகரத்தின் ஒதுக்குப் புறங்களில் செயல்படுத்தப் படுவதாக டாக்டர் முஜாஹீத் மேலும் கூறினார். இது தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையில் ஒரு பொருத்தமின்மையை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆடம்பர அல்லது வணிக வீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் மலிவு விலை வீடுகளின் கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளிப்பதோடு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்துவதன் மூலம் தீர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
வழக்கமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகும் ஒரு புதிய நகரியத்தை உருவாக்குவதை விட, சிறந்த வசதிகளுடன் கூடிய ஒரு மூலோபாய இருப்பிடம் வாங்குபவர்களின் மனதைக் கவரும் என்று அவர் விளக்கினார்.
"ஒரு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கும் போது, முதலில் குடியிருப்பாளர்களும் மக்கள் தொகையும் இருக்க வேண்டும். நாம் முதலில் வணிக மையங்களைக் கட்டிவிட்டு பிறகு வீடுகளைக் கட்ட முடியாது."
"எனவே, இதற்கு ஒரு மாற்றுத் தீர்வாக, மேம்பாட்டாளர்கள் குறைந்தபட்சம் அடிப்படைத் தேவைகளை ஆவது முதலில் வழங்க வேண்டும். ஒரு சிறிய வணிக வளாகத்தைக் கட்டி, பொருத்தமான முதலீட்டாளர்களைத் தேடலாம். இது சவாலானது, ஆனால் இது கருத்தில் கொள்ளக்கூடிய ஒரு வழி," என்றார் அவர்.
'ரூமா சிலாங்கூர்கூ' கொள்கை அதிகாரப்பூர்வமாக ஜனவரி 1, 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய மலிவு விலை வீட்டுக் கொள்கைக்குப் பதிலாக இந்த முயற்சி மாநில அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது.
RM42,000 முதல் RM250,000 வரையிலான விலையில் வீடுகளை விற்பனை செய்வதன் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குழுவினரை இந்தக் கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது.
மக்கள் வீடு வாங்க ரூமா சிலாங்கூர்கூ சிறந்த தேர்வு; இருப்பிடம், அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அவசியம்
21 ஏப்ரல் 2026, 2:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
இலவச திவேட் (TVET) பயிற்சி: சிலாங்கூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு திட்டம்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
24 ஏப்ரல் 2026

video
Selangor pergiat saringan awal warga emas, kesan penyakit kronik lebih awal
Kathiravan Manoharan
24 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூர் முழுவதும் 662 வீடமைப்புத் திட்டங்களில் உள்ள 117,746 மனைகளுக்கு இன்னும் அடுக்குமாடி சொத்துரிமை (hak milik strata) வழங்கப்படவில்லை
Pakiya
22 ஏப்ரல் 2026

selangor
8 மில்லியனுக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை - சிலாங்கூர்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




