ஷா ஆலம், ஏப்ரல் 20: மூத்த குடிமக்களை மையமாகக் கொண்ட தேசிய சுகாதார மற்றும் நோயுற்றல் ஆய்வு (NHMS) 2026-இன் கண்டுபிடிப்புகள், நாட்டின் சுகாதார சவால்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான கொள்கைகளை வகுக்க உடனடி நடவடிக்கையைத் தூண்டுகிறது.
இந்த அறிக்கை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, மாறாக மலேசியாவில் உள்ள மூத்த குடிமக்களின் உண்மையான சுகாதார நிலையை பிரதிபலிக்கிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார் என ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியா 2036- ஆம் ஆண்டுக்குள் முதியோர் நாடாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சுகாதார அமைப்பு தொடர்ந்து நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய முழுமையான தயாரிப்பு தேவை என்பதை உணர்த்துகிறது.
அவரின் கூற்றுப்படி, NHMS 2026 தரவுகள், மிகவும் துல்லியமான மற்றும் பயனுள்ள சுகாதாரத் தலையீடுகளை வடிவமைப்பதில் ஒரு முக்கிய வழிகாட்டியாகச் செயல்படுகின்றன.
"இது வெறும் அறிக்கை அல்ல, மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தின் உண்மையான தரவுகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் ஒரு திசைகாட்டியாக அமைகின்றன," என்றார் அவர்.
NHMS 2026 ஆய்வின்படி, மூத்த குடி மக்களில் 14.7 விழுக்காட்டினர் மட்டுமே சமூக, அறிவாற்றல், உளவியல், உடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உள்ளடக்கிய நலமான முதுமையை அடைந்துள்ளனர் என்பதை வெளிப் படுத்துகிறது.
தொற்று அல்லாத நோய்களின் சுமை கவலைக்குரிய நிலையில் உள்ளது. அவர்களில் 73 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 76 விழுக்காட்டினர் அதிக கொழுப்பாலும் மற்றும் 39 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 68 விழுக்காடு மூத்த குடிமக்கள் குறைந்தது இரண்டு தொற்று அல்லாத நோய்களாலும், 30 விழுக்காட்டினர் ஒரே நேரத்தில் மூன்று முக்கிய நோய்களையும் எதிர்கொள்கின்றனர்.
உடல் ரீதியாக, 30.6 விழுக்காட்டினர் சுறுசுறுப்பாக இல்லை, 45 விழுக்காட்டினர் சர்கோபீனியா (தசை இழப்பு) மற்றும் 60 விழுக்காட்டினர் உடல் பலவீனத்தை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.
இந்த நிலைமை உடனடியாகக் கையாளப் படாவிட்டால், வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையையும் அதிகரிக்கும்.
"நமது சவால் நோய்கள் மட்டுமல்ல, மூத்த குடிமக்கள் தொடர்ந்து கண்ணியமாகவும், சுறுசுறுப்பாகவும், ஓரங்கட்டப் படாமலும் வாழ்வதை உறுதி செய்வதுமாகும்," என்றார் அவர்.
மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தற்போது 4.1 மில்லியனை எட்டியுள்ள நிலையில், அவர்களில் 18.8 விழுக்காட்டினர் தனியாக வசிப்பதாகவும், நடமாட்டம் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் சிகிச்சை பெறுவதற்கு முக்கிய தடைகளாக இருப்பதாகவும் NHMS 2026 அமைப்பு ரீதியான சவால்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, சுகாதார அமைச்சு, வீடுகளுக்குச் சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் முதியோர் மருத்துவ நிபுணத்துவத்தை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் மூத்த குடிமக்களின் பராமரிப்பை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது.
NHMS: 14.7 சதவீதத்தினர் மட்டுமே ஆரோக்கியமான முதுமையைப் பெறுகின்றனர்; பெரும்பான்மையோர் தீராத நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்
20 ஏப்ரல் 2026, 8:08 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் விநியோகம் எப்போதும் போதுமானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்- அமைச்சர்
Pakiya
19 ஏப்ரல் 2026

national
அத்தியாவசிய மருந்துகள், இன்சுலின் மற்றும் தடுப்பூசிகள் விநியோகம் சீராக இருப்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

video
Cuaca panas berpanjangan boleh jejas kesihatan - KKM
Kathiravan Manoharan
26 மார்ச் 2026

national
நீண்டகால வெப்ப வானிலை உடல்நலத்தை பாதிக்கக்கூடும் - சுகாதார அமைச்சு
Shalini Rajamogun
25 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




