ஷா ஆலம், ஏப்ரல் 18: பந்திங், ஜாலான் சுங்கை நங்கா பகுதியில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தை கோலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL) சுத்தப்படுத்தியதுடன், அங்கு குப்பை கொட்டத் தடை விதிக்கும் எச்சரிக்கைப் பலகைகளையும் நிறுவியுள்ளது.
கடந்த புதன்கிழமை, எம்.பி.கே.எல்-இன் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையின் சிறப்புப் பணிக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அவ்விடத்தில் கான்கிரீட் தடுப்புகளும் வைக்கப்பட்டன.
"எம்.பி.கே.எல் அமலாக்கப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் அப்பகுதியில் சட்ட விரோதமாகக் குப்பைகள் கொட்டப்படுவது குறித்த பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது" என முகநூல் வழியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எம்.பி.கே.எல்-இன் கூற்றுப்படி, சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டுவதற்கு மையமாக விளங்கிய இந்த இடம், அரசாங்கத்திற்குச் சொந்தமான ரிசர்வ் நிலம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.
"காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை, தடைப் பலகைகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகள் நிறுவும் பணிகளுடன் காலை 11 மணியளவில் நிறைவடைந்தது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை மதித்து நடப்பதை உறுதி செய்ய, எம்.பி.கே.எல் அவ்வப்போது தனது கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்.
மேலும், உள்ளூர் சமூகத்தின் நலனுக்காகச் சுற்றுச்சூழலைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதை உறுதி செய்வதில் உள்ளூராட்சி மன்றம் உறுதியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்திங், ஜாலான் சுங்கை நங்கா பகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டத் தடை
18 ஏப்ரல் 2026, 5:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Tujuh premis di Pandamaran Jaya dikompaun gagal patuhi kebersihan
Kathiravan Manoharan
18 மே 2026

selangor
குடியிருப்பாளர்களுக்கு ஈ தொல்லை- கோழிப் பண்ணையாளர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் பண்ணைகளைத் தற்காலிகமாக மூட நடவடிக்கையை எடுக்கப்படும்.
Pakiya
15 பிப்ரவரி 2026

selangor
கோலா லங்காட் நகராட்சி மன்றம், பந்திங்-கிள்ளான் சாலையில் சட்டவிரோத குப்பைகளை அகற்றும் நடவடிக்கை
Pakiya
1 ஏப்ரல் 2026

national
ஈக்கள் தொல்லையால் கோலா லங்காட்டில் கோழிப் பண்ணைகள் மீது நடவடிக்கை
Shalini Rajamogun
19 மே 2026

உங்கள் கருத்து என்ன?




