மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் மருத்துவத்துறைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார். இந்த மோதலில் இரு வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்த ஒரு நாள் கழித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஷாராஃ Shargh செய்தித்தாளின் படி, கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் சுமார் 40 விழுக்காடு அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாக ஈரானிய தடயவியல் மருத்துவ சங்கத்தின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெடி அராணி கூறியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு ஆர்வலர்கள் வெளியிட்ட எண்ணிக்கையில் 3,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியிருந்ததால், பலி எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நார்வேயை தளமாகக் கொண்ட ஹெங்காவ் மனித உரிமைகள் அமைப்பு, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த மோதலில் 1,030 பொதுமக்கள் உட்பட குறைந்தது 7,650 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தது. இருப்பினும், இந்த இறப்பு எண்ணிக்கையை சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது பெரிய அளவிலான குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால், புதன்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் விமானத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதால், இந்த போர் நிறுத்தம் விரைவில் சிதையக் கூடும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியது, ஆனால் ஈரான் இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
10 ஏப்ரல் 2026, 6:39 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி: போர்க்களத்தில் "புதிய வியூகங்களை" வெளிப்படுத்த ஈரான் தயார்
Shalini Rajamogun
22 ஏப்ரல் 2026

antarabangsa
இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்பு: ஈரானில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Shalini Rajamogun
20 ஏப்ரல் 2026

antarabangsa
அமெரிக்க-இஸ்ரேல் இடையேயான 40 நாள் போரின் போது 170 ட்ரோன்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது
Shalini Rajamogun
20 ஏப்ரல் 2026

antarabangsa
அமெரிக்க-ஈரான் மோதல்: பேச்சுவார்த்தை கதவு மூடப்பட்டது, ஆனால் பூட்டப்படவில்லை
Pakiya
18 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




